உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மே தினம் பணம் கோயில்களிலே நகையாய், வாகனமாய் நிலமாய் முடங்கிக் கிடக்கிறது. இந்த முடக்குவாதம் தீர்ந்தால் முடிவுறும் வறுமை, கொடுமை, இல்லாமை என்பனவெல்லாம். இது எதை உணர்த்துகிறது? இந்த நாடு ஏழை என்பதையா? எப்படி ஏழை என்று கூற முடியும் இந்நாட்டை? தில்லைக் கூத்தரின் தங்க ஓடு வேய்ந்த சன்னிதானத்தையும், வரதரின் வயிர நாமத் தையும் காஞ்சிகாமாட்சியின் வைடூரியக் கற்களையும், அரங்கநாதரின் அற்புத இரத்தினங்களையும், வேங்கடத்தானின் பத்து லட்சம் பெறும் வைர முடி யையும் காணும்போதும் கேட்கும் போதும் - அதிலும் இந்தத் திரவியம் எவ்வித நலனுமின்றி மூலையில் முடங்கிக் கிடக்கிறது ஒரு சில சாமி (ஆசாமி)களின் உல்லாச வாழ்வைக் கருதி என்பதை அறிந்த பிறகு- இந்த நாட்டை ஏழை நாடென்று எவராவது கூற முடியுமா? பொருளில்லையா இந்த நாட்டில்? இருக் கிறது. யாரிடம் பொருள் உளது? மதத்தின் பெய ரால் கோயிலாகவும், வாகனமாகவும், ஆண்டவன் சொத்தாகவும் அடைந்து கிடக்கிறது. அந்தப் பொருள் பிறவி முதலாளிகளைக் ஆரியரை) கொழுக்க வைக்கப் பயன்படுகிறது. பரமன் பேரால் உள்ள பணம் அதிர் வெடிக்கும், அலங்கார ஆர்ப் பாட்டப் பூசைக்கும். தேருக்கும் திருவிழாவிற்கும் உபயோகமாகிறது, அநாவசியமாக, அர்த்தமற்று. இது நீதியா? முறையா? என்று கண்டிக்கிறோம். இதில் தவறென்ன? செல்வமிக்க இந்த நாட்டில் வறுமையால் வாடி தங்கி வெளி நாடு செல்லும் தோழர்கள் இந்த