உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள் சி. என். அண்ணாதுரை 71 நாட்டை வாழ்த்தியிருப்பர் என்றா நினைக்கிறீர்கள்! துக்கம் நெஞ்சையடைக்கக் கண்ணீரைக் கடல் நீரிலே கலக்கி, அந்தக் கதியற்றவர்கள் இந்நாட்டைப் பார்த்து, அளவற்ற செல்வம் உன்னிடம் இருந் தென்ன? நாங்கள் அனாதைகள்தானே! வற்றாத நதி இங்கே பாய்ந்தென்ன? எங்கள் வாழ்க்கைப் பாலைவனம்தானே! நஞ்சையும் புஞ்சையும் இருந் தென்ன? நாங்கள் பஞ்சைகள்தானே! பணமிருந் தென்ன?/ பராரிகள் தானே நாங்கள்? ஒரு கவளம் சோறில்லாது ஓடுகிறோம் நாட்டை விட்டு, தங்த ஓடு வேய்ந்த கோயில் உள்ள தில்லையான் வாழும் இந்த நாட்டில் வதியும் நாங்கள்! வள்ளல்கள் வாழ்ந்த நாடாம்! நாதியற்ற நாங்கள் வாழ வழியில்லை இந்த நாட்டில்! செல்வமுண்டு இந்த நாட்டில், எங்கட்குச் சோறிட மக்களில்லை. ஈரமில்லை நெஞ்சில், ஈசனைப் போற்றியேத்தும் மக்களிடம். நாங்கள் வாழ வழி செய்யாமல் எங்களை வெளி நாட்டிற்குப் போகச் செய்யும் திரு நாடே! அரசியலை ஆங்கிலனிடமும், ஆத்மார்த்தத்தை ஆரியனிடமும், வாணிபத்தை வட நாட்டானிடமும் ஒப்படைத்துவிட்டுக் கிடக்கும் ஏ அடிமை நாடே! சோறில்லை எங்களுக்கு, சொர்ணம். விளையும் இந்த நாட்டில். எங்களை இக்கதியில் விடும் நீ இருந்தென்ன! போயென்ன! அக்ரமத்துக்கு இட வளித்து -ஏ அறி அனாதைகளைத் துரத்துகிறாய் அறிவிழந்து, நாடே! நீ அழிந்து படு! அழிந்து படு! என்றுதான் சபித்திருப்பர்; தம் நெஞ்சக் குமுறலைக் கொட்டியிருப்பர். இத்தகைய நிலைமை நாட்டிலே நில்வக் காரணம் என்ன? ஒரு குலம் அந்தப் பஞ்சமும் பிணியும் பீடை