உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மே தினம் யும் அண்டாது வாழ, அதற்காக மற்றவர் மாடென உழைக்க வேண்டுமென்பது மகேஸ்வரன் ஆணையா? சாத்திர இலக்கிய ஆதாரமா? நெஞ்சில் கைவைத்து ஈரமுடன் நினைத்துப் பாருங்கள்! உண்மையை. உணர்வீர்கள்; உலுத்தரை ஒடுக்க வழி காண்பீர்கள். நம்முடைய மன்னர்கள் இதிகாச புராணம் படித்து அடுத்த பிறவிக் கவலையிலாழ்ந்து ஆட்சியை மறந் தனர், அதனால் அந்தணர் புகுந்தனர் அரசியலில் அதன் பலன் இன்று நாம் சகல துறைகளிலும் வகை யற்று,வாழ் வழியாடிக் கிடக்கின் ற மாற்றானுக்கு மக்களை மறந்தோம். நாம் நல்வாழ்வு பெற, மாற்றானைத் தொலைக்க, மதியைப் பெற, விதியை விரட்ட, பஞ்சப்பிE: யைப் பறக்கடிக்க, ஓர் இடம் தேடுகிறோம், நாம் வாழ. நம் குறிக்கோளுடன் வாழ் ஒரு எல்லைக் கோடு வகுத்துள்ளோம். திராவிட நாட்டைத் தனி நாடாகப் பிரிக்க வேண்டுமென்கிறோம். திராவிடக் கூட்டாட்சி நடத் துவதே எங்கள் நோக்கம். திராவிடக் கூட்டாட்சி யிலே தெலுங்கரும், மலையாளரும் சேர்வர். ஏன்?-- தெலுங்குக்கும் மலையாளத்துக்கும் தமிழ் மொழியே. தமிழுக்கு ஆதியாக இருப்பது திராவிடம். எனவே மூன்று மொழிகளும் சேர்ந்த கூட்டரசு இங்கே நடைபெறும். அதிலே தமிழர் தனிமொழி யோடு வாழ்வர். தெலுங்கரும் அவ்விதம், கேரள ரும் அவ்விதமே. ஆனால் டெல்லி ஆட்சிக்குப் பதில் திராவிடக் கூட்டரசு நடக்கும்;