பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீட்சிப் படலம் 103. சிறையிலுள்ள நண்பர்களேச் சிறையிலிருந்து வெளி யேற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்துகொண் டிருப்ப தாகத் தகவல் எட்டியது. வேலே நிறுத்தம் செய்வது பின்னல் தப்பியோடுவதற்கு இடையூருகும் என்று கருதி, கைதிகள் அதைக் கைவிட்டனர். அதிகாரிகளும் அவர்களுடைய எதிர்ப்புக்கு அஞ்சித் தங்களுடைய கண்டிப்பைக் குறைத்துக்கொண்டனர். ராஜியக் கைதிகள் மற்ற குற்றவாளிகளோடு கலந்துகொள்ளாமல் சிறையின் வைத்தியசாலையிலுள்ள நல்ல அறையில் வசித்துவந்தனர். வைத்தியசாலை சிறைக்குப் பின்னல் தனியாக இருந்தது. ராஜியக் கைதியான பார்ட்டன் என்பான் ரகசியமாக ஒர் அரத்தை வரவழைத்து வைத்துக்கொண்டு, தன்னுடைய அறை யின் ஜன்னல் கம்பி ஒன்றை அறுத்தெடுத்துவிட்டான். மார்ச் மாதம் 16-ம் தேதி இரவு அவன் வெளியேறுவதற் குக் குறிப்பிடப்பட்டது. அன்று இரவு, அவன் சில அணிகளேச் சுருட்டி நீளமான ஒர் உருவத்தைப்போல் தோன்றும்படி படுக்கையில் கிடத்திவிட்டு, வெளியேறி விட்டான மதில் சுவருக்கு வெளியே தொண்டர்கள் காத்து கின்றனர். பார்ட்டன் தான் தயாரா யிருப்பதற்கு அறிகுறியாக ஒரு சவுக்காரத் துண்டை வெளியே எறிந்தான். வெளியிலிருந்த தொண்டர்கள் கயிற்றின் வழியாக ஒரு நூலேணியை அனுப்ப, அதன் உதவி யால் பார்ட்டன் வெளியேறித் தப்பித்துக் கொண்டான். அவன் விடுதலைக்கு வேண்டிய ஏற்பாடுகளின் காரணஸ் தன் காலின்ஸ்தான். காலின்ஸ் மெளன்ட்ஜாய் சிறையிலிருந்த சகல ராஜீயக் கைதிகளேயுமே அப்புறப்படுத்த வேண்டும்