பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

7

அந்தக் கோர யுத்தத்தையும் எதிர்த்து நின்று சமாளித்தனர் ஐரிஷ் தொண்டர்கள். போருக்குப் போர், கொலைக்குக் கொலை, நெருப்புக்கு நெருப்பு என்று, சுடச் சுட உடனுக்குடன் பதில் கொடுத்தார்கள் அந்த வீர வாலிபர்கள். அரசாங்கமே உருக்குலேந்து விழும்படி சிறு சிறு கூட்டங்களாகப் பிரிந்து சென்று தாக்கினர்கள். ஒற்றர்களும் போலீஸ்காரரும், உடைகள் அணிந்து ஒய்யாரமாக நடந்துவந்தது மாறி, காட்டிக் கொடுத்த துரோகிகள் என்ற அட்டைகள் கழுத்திலே தொங்க, ரஸ்தாக்களில் பிணங்களாகக் குவிந்து கிடந்தார்கள். தொண்டர்கள் அவர்களைப் படையெடுத்து வந்த பகைவர்களாகவே கருதினர்கள். புரட்சிக் காலம் முழுதும் தொண்டர்களுக்குத் தலைமை தாங்கி வெற்றியுடன் நடத்தி வந்தவன் காலின்ஸ். அதனால்தான் அவன் சரித்திரம் துப்பறியும் நாவலைப் போல் வியப்பும் திகைப்பும் நிறைந்திருக்கிறது. காவின்ஸ், டிவேலரா, கிரிபித் போன்ற தலைவர்களும், பல்லாயிரம் தொண்டர்களும், பொது மக்களும் இடைவிடாது செய்த போராட்டத்தினால், 1921-ல் அயர்லாந்து விடுதலே பெற்றது.

ஆதியில் இங்கிலாந்து அயர்லாந்தின்மீது முதன்முதல் படை யெடுத்தது 1172-ல் , அயர்லாந்துக்கு விடுதலை அளித்து விலகிக் கொண்டது. 1921-ல். 1921-ம் , டிசம்பர் 6௳ காலேயில்தான் ஆங்கில-ஐரிஷ் ஒப்பந்தம் பூர்த்தியாயிற்று. அதன்படி இங்கிலாந்து அயர்லாந்தை விட்டு விலகும்போது, அரசாங்கத்தைக் காலின்ஸின் கையிலேயே ஒப்படைக்க நேர்ந்தது. கிரிபித்தின் மாணத்திற்குப் பின், காலின்ஸே அரசாங்கத்திற்கும் ஐரிஷ் பட்டாளத்திற்கும் தலைவனான்.

வாழ்விலும் வீரனாய், சாவிலும் வீரனாய் விளங்கிய காலின்ஸின் வரலாற்றை அவன் தோழரான பீஸ்லேய் எழுதி வெளியிட்டிருக்கிறார். அந்நூலை ஆதாரமாய்க் கொண்டே நான் இதை எழுதியுள்ளேன். அது மிகப் பெரிதாய், இரண்டு பாகமா யிருப்பதால், கூடியவரை முக்கிய சம்பவங்கள் விட்டுப் போகாமல் இங்கே சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.

1916-முதல் 1921-வரை நடந்த ஐரிஷ் சுதந்திரப் புரட்சியையும், அந்தப் புரட்சியை நடத்திய காலின்ஸ் போன்ற தலைவர்களின் வரலாற்றையும் நன்கு உணர்ந்து கொள்வதற்கு, அயர்லாந்தின் பூர்வ சரித்திரப் போக்கையும், அந்நாட்டுக்கும் இங்கிலாந்துக்கும் இருந்துவந்த தொடர்பையும் கொஞ்சமாவது