பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னேற்பாடுகள் 119 மான வேலையிலும் அவன் அநுபவம் பெறச் சந்தர்ப்பம் வாய்த்தது. இடையில், தொண்டர் படையினர் அதுகாறும் செய்துவந்த சில காரியங்களே நாம அறிந்துகொள்ள வேண்டும். 1919 ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை தொண்டர்கள் செய்த பெருங் காரியங்களில் சிலவற்றை o இங்கு குறிப்பிடுவோம். இரண்டு வருஷ காலமாய் அவர் கள் போலீஸ் கொடுமைகளை யெல்லாம் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டிருந்தனர். மக்ல்ே தன்னைக் கைதிசெய்ய வந்த போலிஸாருடன் போராடியதைப் போன்ற சம்ப வங்கள் ஆங்காங்கே அபூர்வமாக நடந்தவை. ஸோலோ ஹெட்பக் என்னுமிடத்தில் ஜனவரி 21-வ இரண்டு போலிஸார் தொண்டர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப் போலிஸார் ஒரு வெடி மருந்து வண்டிக்குப் பாது காவலாகச் சென்றுகொண்டிருந்தனர். தான்பிரீன் முதலான தொண்டர்கள் சிலர் வெடி மருந்தைக் கைப்பற்றுவதற் காக முயற்சிக்கையில், அப்போலீஸார் எதிர்த்ததால், அவர்கள் சுட்டுத் தள்ளப்பட்டார்கள். அச் சமயத்தில் பல ஸின்பினர்களே பகைவர்களின் ரத்தம் சிந்து வதற்குச் சம்மதிக்கவில்லை. லோலோ ஹெட்பக் சம் பவத்தால் தேசத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. பின் மார்ச்மீ. 20-வ டப்ளின் தொண்டர்கள் சிலர், கெல்லின்ஸ் - டவுணில் ஆகாய விமானம் இறங்கும் இடத்திற்குச் சென்று,75 துப்பாக்கிகளேயும் பல்லாயிரம் குண்டுகளேயும் கைப்பற்றிக் கொண்டனர். ஆயுதங்களைக் காத்துக் கொண்டிருந்த பட்டாளத்தாரை அடக்கு வதற்குத் தொண்டர்கள் ஒரு குண்டுகூடச் சுடவில்லை.