பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 மைக்கேல் காவின்ஸ் களுக்குப் பணிந்து விட்டான். அதே சமயத்தில் வேறு இரண்டு கார்களும் வந்தன. அவற்றிலிருந்த சிப்பாய் கள் மிகுந்த ஆயுதங்களே வைத்திருந்ததால், தொண்டர் களே நோக்கிச் சுட ஆரம்பித்தனர். தொண்டர்களும் பதிலுக்குச் சுட்டனர். தொண்டர்களில் மார்ட்டின் ஸ்ாவேஜ் குண்டுபட்டு மடிந்தான். அந்தக் கார்களும் வேகமாய்ச் சென்று மறைந்த பின்னர், தொண்டர்கள் அங்கிருந்து டப்ளினே நோக்கிப் புறப்பட்டனர். அவர் களிடம் சைக்கிள் வண்டிகள் மட்டுமே இருந்ததால், அவர்கள் உயிர் துறந்த இளேஞ னை ஸாவேஜின் உடலை அங்கேயே போட்டு விட்டுச் சென்றனர். அரசாங்கமும் சில பத்திரிகைகளும் இச் சம்பவத் தைக் கொலை முயற்சி அதிக்கிரமம் முதலிய வசை மொழிகளால் கிந்தித்த போதிலும், பொதுஜனங்கள் உண்மையை உணராமலில்லே. பதினுெரு தொண்டர்கள் பெரும் பாதுகாப்புடன் வந்த கவர்னர் ஜெனரலே எதிர்ப் பது விளையாட்டா, அல்லது அரும் போராட்டமா ? ஒரு பக்கம் யந்திரத் துப்பாக்கிகளுடன் கூடிய சிப்பாய்கள் பலர்; மறு பக்கம் கைத் துப்பாக்கிகளும் வெடி குண்டு களும் தாங்கி கிற்கும் யுத்தப் பழக்கமற்ற சில இளேஞர் கள். அவ்விளைஞர்களுக்குப் போராட்டத்திலும் மரணம் ஏற்படலாம், அன்றி எதிரிகள் கையில் அகப்பட்டாலும் மரணந்தான். இவற்றை யெல்லாம் பொதுமக்கள் எண்ணிப் பார்த்தார்கள். உள்ளத்தில் யாதொரு சுய நலமும் இல்லாமல், உயிரைத் திரணமென்று கருதிப் போராடும் தொண்டர்களே அவர்கள் மதிக்க ஆரம்பித் தார்கள். அவர்களுடைய மனுேபாவம் மார்ட்டின் லாவே ஜின் பிரேத் விசாரணை அறிக்கையிலிருந்து வெளியா