பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சியின் வீழ்ச்சி 167 ஆள முடியாமற் போகவே ராணுவ பலம் ஒன்றை வைத்தே அயர்லாந்தை அடக்கியாள வேண்டியிருந்தது. போலீஸார் ஒற்றர்கள் முதலியோர் உதவியின்றி ராணுவத்தார் வெகுநாள் ஆள முடியாது. ஆயினும், ஆங்கிலேயருக்கு வேறு வழியில்லை. எனவே, அவர்கள் ராணுவத்தின் பயங்கர ஆட்சியை விரைவிலேயே ஆரம்பித்தனர். அச்சமயத்தில் மெளண்ட்ஜாய் சிறையில் எழுபத் தைந்து தொண்டர்கள் தங்களே ராஜியக் கைதிகளாக நடத்தவேண்டும் என்று உண்ணுவிரதம் தொடங்கினர். பொதுஜன்ங்கள் அவர்களே ஆதரித்து கின்றனர். பெரிய மனிதர்களுடைய வேண்டுகோள்களும் ஜனங் களின் கிளர்ச்சியும் அதிகாரிகளுடைய பிடிவாதத்தை விலக்க முடியவில்லை. ஐரிஷ் தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக சபையும், தொழிற் கட்சியும், உண்ணுவிரத மிருந்த தொண்டர்களுக்கு அதுதாபம் காட்டுவதற் காக வேலைநிறுத்தம் செய்யவேண்டும் என்று தீர்மா னித்தன. ஐரிஷ் பிஷப்புகளின் சங்கம், உண்ணுவிரதம் காரணமாக எவர்களாவது இறந்தால், அதற்கு ஆங்கில அரசாங்கமே பொறுப்பாகும் என்று, எச்சரிக்கை அனுப்பியது. தேசம் முழுவதிலும் பெரும் பெரும் கண்டனக் கூட்டங்கள் கூடின. பத்து நாள் உண்ணு விரதத்திற்குப் பின்னல், மெளண்ட் ஜாயிலிருந்த கைதி: கள் யாவரையும் அரசாங்கம் விடுதலை செய்தது. இதன் பிறகு லண்டன் வோர்ம்வுட் ஸ்க்ரப்ஸ் சிறை யிலிருந்த ஐரிஷ் கைதிகளும் உண்ணுவிரதத்தைக் கைக் கொண்டனர். அவர்களுடைய தலைவனை ஜோ. மக்ராத் என்பவனே வேறு சிறைக்கு மாற்றுவதை ஆட்சே