பழிக்குப் பழி 209 ளத்தாரும் தற்காப்புக்காகச் சுடகேர்ந்தது என்றும், 21-ம் தேதி 14 அதிகாரிகளே வதைத்தவர்கள் காட்டுப் புறத்திலுள்ள தொண்டர்கள் என்றும், அவர்கள் பந்து விளேயாட்டுக்கு வருவதாகப் பாவனே செய்துகொண்டு அக் கொலைகளேச் செய்தனர் என்றும், அவர்களேத் தேடிப் பிடிக்கவே பட்டாளத்தார் தோட்டத்திற்கு அனுப்பப்பட்டனர் என்றும் பொய் கூறிற்று. இம்மாதிரி அறிக்கைகள், பொய்யே விளை நிலமாக, பொய்யே வித் தாக விளைவித்து எடுக்கப்பட்ட பொய்க் கதிர்கள் என் பதைப் பொது ஜனங்கள் அறிவார்கள். அதிகாரிக ஆள வதைத்ததும், நகரத்தைச் சோதனே யிட்டதும்-எல்லாம் டப்ளின் தொண்டர் படையின் வேலேகள். காட்டுப்புறத் அதுத் தொண்டர்கள் தலைநகரத்தில் புகுந்து குறிப்பிட்ட இடங்களேயும் கபர்களேயும் கண்டுபிடிக்கவே திறமையற் றிருந்தார்கள். கைதியான மக்கி, கிளான்ஸி, குளுன் ஆகியவர்களேச் சுவரடியில் கிஅத்தி வைத்துப் பட்டாளத்தார் சுட்டு விட்டனர். மக்கீ, கிளான்ஸி இருவருடைய பிரேதங் களேயும் அவர்களுடைய பந்துக்கள் எடுத்துக் கொண்டு வந்த பொழுது, அவைகளின்மேல் துப்பாக்கிச் சனியனல் குத்தப்பட்ட பல காயங்கள் இருந்தன. அவற்றிலிருந்து அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்னுல் பல சித்திர வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பது புலஞ யிற் று. மக்கீயின் மார்பெலும்புகளில் சில உடைங் திருந்தன. அதிகாரிகள் வேண்டுமென்றே இக்கொஆல களேச் செய்துவிட்டு, அவர்கள் தப்பியோட முயன்ற பொழுது கொல்லப்பட்டனர் என்று அறிக்கை வெளி யிட்டனர். அவர்கள் தப்பியோட முயன்ற முறைகளையும், மை-14
பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/213
தோற்றம்