பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#21 of மைக்கேல் காலின்ஸ் எவ்வாறு பிடிக்கப்பட்டனர் என்பதையும் பற்றி அதி காரிகள் பல கதைகள் கற்பித்தனர். மக்கி, கிளான்ஸி இருவரும் மரணமடைந்தது சுதந்திர யுத்தத்தில் தொண் - டர் படைக்கு ஏற்பட்ட நஷ்டங்களிலெல்லாம் முக்கிய மானது. மக்கி காலின்ஸின் வலது கை காலின்ஸ் அவ் வீரர்களுடைய அந்திமக் கிரியைகளுக்குக் கூட இருந்து வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தான். அச் சமயத்தில் அவன் வெளியேறுவதில் எவ்வளவு அபாயம் இருந்தது என்பதை அவன் பொருட்படுத்தவே யில்லே. ரேதங்கள் அடக்கஞ் செய்யப்படுவதற்கு முன்ல்ை தக்க வைத்தியர்கள் அவற்றைப் பரிசோதித்து அறிக்கை வெளியிடவும் அவன் ஏற்பாடு செய்தான். பட்டாளத்தாருடைய பழிவாங்கும் மைேபாவத் தைக் காட்டுவதற்கு மற்ருெரு சம்பவத்தையும் இங்கு கூறுவோம். 21-ம் தேதிக்கு இரண்டு தினங்களுக்குப் பின், ஒரு பட்டாளத்தான் லிங்கன் பிளேஸில் கின்று கொண்டு பல ஜனங்களேச் சோதனே யிட்டான். பின்னல் அவன் அவர்களைப் போகும்படி சொல்லிவிட்டு, அவர் கள் சில அடிகள் பெயர்ந்ததும், துப்பாக்கியை நீட்டிச் சுட்டான். அதல்ை ஒர் இளைஞன் மடிந்து வீழ்ந்தான். ரானுவத்தாரின் மரண விசாரணையில், தொண்டர்கள் அங்கு பயிற்சி செய்துகொண்டிருந்ததாயும், அதல்ை தான் சுட்டதாயும் அவன் அறிவித்தான். தொண்டர் கள் இருந்திருந்தால் தனியாய் கின்று சுட்ட சிப்பாயை விட்டிருப்பார்களா ? = நவம்பர் 21-ம் தேதி நடந்த சம்பவம் பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜின் கண்களேத் திறந்தது. எவ் வகையாலும் அயர்லாந்தை நசுக்கிப் பெட்டிப் பாம்பு