பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழிக்குப் பழி 213 இருட்டறையில் அடைத்துச் இல நாட்களாக விசாரித்து வந்தனர். கேள்வி கேட்பவர் முகத்தை மூடிக்கொண்டும், ஹார்ட்டியின் முகத்தில் வெளிச்சத்தை அடித்துக்கொண்டும் நிற்பது வழக்கம். ஹார்ட்டியிட மிருந்து காலின்ஸைப் பற்றிய விவரங்களைக் கறப்பதற்கு எத்தனையோ தந்திரங்களேக் கையாண்டனர். ஒன்றும் பலிக்கவில்லை. முடிவில் அதிகாரிகள், காலின்ஸ் உன் விடுதிக்கு வந்தவுடன் நீ, மிஸ்டர்-வந்திருக் கிருர் ! ' என்று டெலிபோனில் சொல்லுவாயானல், உன்னே இப்பொழுது விட்டுவிடுகிருேம்” என்று கூறினர். ஹார்ட்டி அதற்கு இசைவதுபோல் பாசாங்கு செய்தான். பின் அவன் விடுதலை யடைந்து, காலின்ஸைக் கண் டு நடந்ததை யெல்லாம் விவரமாகக் கூறினன். காலின்ஸ் அவன் விருத்தாந்தத்தைக் கேட்டுக் குலுங்கக் குலுக்க .நகைத்தான். அயர்லாந்தின் விடுதலைப் போர், ஒரு காலின்ஸ், ஒரு கிரிபித், ஒரு டிவேலராவால் மட்டும் நடத்தப்பட்ட தன்.அ. சில ஆயிரம் தொண்டர்களால் மட்டும் நடத் தப்பட்டதன்று. அவர்கள் எல்லோரும் போர்க்களத் தின் முகப்பிலே கின்றது உண்மைதான். மரணத்தை அவர்கள் துச்சமாக எண்ணி மிருத்யுவின் அரங்கத்தில் மகிழ்ச்சியுடன் நடனமாடியதும் உண்மைதான். ஆல்ை, தங்கள் தேசத்தினருடைய பூரண ஆதரவும், பெருங் தியா கமும் இல்லாதிருந்தால், அவர்கள் ஆழங்காணுத அந்த காரத்தில் வீழ்ந்து மறைந்திருப்பார்கள். பணத்தை விரும்பி, பட்டாளத்திற்கு அஞ்சி, ஜனங்களில் எவ ரேனும் துரோகத்தில் இறங்கியிருந்தால், விடுதலைப் போர் விழலாகியிருக்கும். காலின்ளையுைம், கொண்டர்களில்