பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 மைக்கேல் காவின்ஸ் போர்டிலும் தென் அயர்லாந்திலும் அவைகள் இ.ை விடாது வேலை செய்துவந்தன. அப்படைகளில் எவற்றி அலும் முப்பதுக்கு மேற்பட்ட தொண்டர்கள் இருப்ப தில்லை. அவைகள் தங்களுக்குக் குறித்த எல்லைகளுக் குள்ளே இருந்த படைவீடுகளேத் தாக்குதல், போலீஸ் பட்டாளங்களே வழிமறித்துப் போர் செய்தல் முதலிய காரியங்களேச் செய்துவந்தன. சில சமயங்களில் அவை கள் வெளியிலிருந்து உதவிப் படைகளே வரவழைத் துக்கொள்வதும் வழக்கம். இத்தகைய தொண்டர் படைகள்தான் அரசாங்கத்தின் 50,000 சிப்பாய்களே யும், 15,000 கறுப்புக் கபிலரையும் மூச்சுத் திணறும்படி செய்ததோடு, அவர்களுக்கு இடைவிடாது வேலை கொடுத்தும் வந்தன. இவ்வாறு விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் பல்லாயிரவரை எதிர்த்து கின்று, பல நெடு காளாய்ப் போர் செய்து, வெற்றிகொண்ட விந்தை இந்த 20-ம் நூற்ருண்டில் அயர்லாந்தில் நடந்தது! கில்மைக்கேல் என்னுமிடத்தில் நவம்பர் மாதம் 28-ம் தேதி கார்க் தொண்டர்கள் போரில் இறங்கினர். தொண்டர்கள் அங்கு 17 பட்டாளத் தாரைச் சந்தித்துப் போராடினர். சிறிது நேரம் சென்ற பின் சிப்பாய்கள் பணிந்துவிட்டனர். தொண்டர்கள் அவர்களே கம்பி அருகே செல்லுகையில், அவர்கள் மீண்டும் சுட ஆரம்பித் தார்கள். உடனே தொண்டர்களும் எதிர்த்துச் சண்டை செய்து, அவர்களில் ஒருவன் நீங்கலாக மற்ற யாவரையும் சுட்டனர். அந்த ஒருவனும் இறந்தவனேப் போல் பாசாங்கு செய்ததால்தான் தப்பின்ை. பின்னல் அவன் தன் அதிகாரிகளிடம் அச் சம்பவத்தைப் பற்றிக் கூறுகையில், பொய்கள் பலவற்றைப் புனேந்து கூறினன்.