பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 மைக்கேல் காவின்ஸ் என்று சில அதிகாரிகள் வற்புறுத்தினர். 1918-க்குப் பின்னுல் மகாகாடு கூடவே யில்லை என்ருலும், அச்சமயம் அதைக் கூட்டுவது உசிதமாயில்லை. அப்பொழுதுதான் ஆங்கிலப் படைகள் தங்கள் படை விடுகளேயும் அதி காரங்களேயும் தேசிய அரசாங்கத்தினிடம் ஒப்படைத்துக் கொண்டிருந்தன. மகாநாடு கூடி, தொண்டர் படை யிலுள்ள ஊழல்களும் பிளவுகளும் வெளிப்பட்டால், அங் கியப் படைகள் அவற்றைக் காரணமாகக் கொண்டு நாட்டை விட்டு அகலாமல் கிற்க நேரும். எனவே, மகா நாடு இரண்டு மாதங்களுக்கு ஒத்திப்போடப்பட்டது. ஆங்கிலப் படைகள் காலி செய்த படை வீடுகளில் எந்த நேரிமும் சேவை செய்யக்கூடிய தொண்டர்கள் ஒரு படையாக வைக்கப்பட்டனர். முழு நேரமும் சேவை செய்ய முடியாத தொண்டர்களைக் கொண்டு கையிருப்புப் படை ஒன்றும் நிறுவப்பட்டது. புதிய தேசீயப் படைக்கு ஜே. ஜே. ஒகானல் சேபைதியாக நியமிக்கப்பட்டான். சேனையைப் போலவே, ஒரு போலீஸ் படையும் கிறுவப் பட்டது. வின் பின் மகாநாடு பெப்ரவரிமீ கூடிற்று. பிரதி நிதிகளில் பெரும்பாலோர் உடன்படிக்கையை எதிர்ப் பவர்களா யிருந்தனர். ஆயினும், அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாகத் தேசத்தார்.அல்லலுருத படி நடுநிலையான முறையைக் கையாளவேண்டும் என் னும் நோக்கத்துடன் இருந்தனர். இக்காரணத்தால் டிவேலரா காலின்ஸைக் கண்டு பேசி ஒரு ராஜிக்கு ஏற்பாடு செய்தார். அதன்படி ஸின் பீன் ஸ்தாபனத்தில் உடனே மாறுதல் எதுவும் செய்யக்கூடாது என்.அறும், பொதுத் தேர்தலை மூன்று மாதங்களுக்கு ஒத்திப்போட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.