பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

மைக்கேல் காலின்ஸ்

பார்த்து அப்படியே அச்சிட்டுப் பத்திரிகையாக வெளியிட்டுவந்தார். இதர பத்திரிகைகளில் வரும் செய்திகளே அதில் வெளியிடப்படினும், அச்செய்திகள் தொகுக்கப்பட்ட முறை தேசீயப் பிரசாரத்திற்கு ஏற்றதா யிருந்தது. இரண்டு மாத காலத்தில், அரசாங்கம் அதன்மேலும் சீறிப் பாய்ந்து, அதையும் விழுங்கிவிட்டது. தொண்டர்கள் அதிலிருந்து தங்கள் பத்திரிகைகளை பெல்பாஸ்டில் அச்சிட்டுக் கொண்டுவந்தனர். பெல்பாஸ்ட் மிகுந்த ராஜவிசுவாசமுள்ள பிரதேசமான வட அயர்லாந்தின் தலைநகர். ஐரிஷ் வாலிபர்கள் பட்டாளத்தில் சேரக் கூடாது என்பதைப்பற்றியும் தொண்டர்கள் பல வழிகளில் பிரசாரம் செய்தனர். இவற்றையெல்லாம் கண்ட சர்க்கார் முக்கியமான தொண்டர்களைக் கைதிசெய்யவும் நாடுகடத்தவும் முற்பட்டது. அதுகாறும் சிறிது சிறிதாக வளர்ந்துவந்த தொண்டர் படை அடக்குமுறையின் உதவியால் விசேஷ வளர்ச்சியை அடைந்தது.

1915-ம் ௵, ஆகஸ்டு௴, அமெரிக்காவிலிருந்த ஐரிஷ் தேசாபிமானி ரோஸ்ஸா என்பவர் முதிர்ந்த வயதில் காலமானார். அவருடைய பூதவுடலைத் தாய்நாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்று தொண்டர்கள் தீர்மானித்தனர். அவ்வாறே, அயர்லாந்துக்காகவே வாழ்ந்து, அதற்காகவே போராடி, அதற்காகவே மடிந்த ரோஸ் வலாவின் உடல் தாய்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. பல்லாயிரக் கணக்கான ஜனங்கள், ஆங்கிலச் சிறைகளிலே பல்லாண்டுகள் கிடந்து புழுங்கிய அவ்வுடலைக் கண்டு வணக்கஞ் செய்தனர். தொண்டர்கள், ராணுவத் தோரணையில் அணிவகுத்து நின்று, தங்கள் ஒப்பற்ற தலைவருக்கு மரியாதை செய்தனர். கல்லறைக்கு அருகே