பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மைக்கேல் காலின்ஸ்


தொண்டர்கள் குழுமியிருந்தனர். அவர்கள் துணையால் சுதந்திரப் போரில் வெற்றி கொள்ளலாம் என்று வாலிப அயர்லாந்து துணிந்து நின்றது. அதிகாரிகள் உண்மையில் விழித்துக்கொள்ளாவிடினும், இடையிடையே சிற்சில தொண்டர்களைக் கைதிசெய்து வந்தார்கள். தொண்டர்கள் ஆயுதங்களைப் பெற முடியாதபடி தடுத்தும் வநதார்கள்.

அமெரிக்காவிலிருந்து ஒரு ஜெர்மன் கப்பலில் ஆயுதங்கள் வருவதாயும், அக்கப்பல் 21, 22-ஆம் தேதிகளில் அயர்லாந்தை அடையக்கூடும் என்றும், ஈஸ்ட்டர் விழாவன்று ஒர் எழுச்சி ஏற்படலாம் என்றும், ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி அயர்லாந்திலுள்ள பிரிட்டிஷ் படையின் சேனாதிபதிக்குத் தகவல் கிடைத்தது. அதனால் கடற்கரை முழுதும் காவல் செய்யப்பட்டு வந்தது. என்னவாயினும், எழுச்சியைப்பற்றி சர்க்காருக்கு நம்பிக்கை ஏற்படவேயில்லை.

எழுச்சிக்குச் சில இன்னல்களும் நேர்ந்தன. முதலாவதாகத் தொண்டர்படைப் பஞ்சாயத்தின் தலைவனான மாக்னில் எழுச்சிக்கு விரோதமாயிருந்தான். முக்கியமான சில தொண்டர்கள் தங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்குமாறு அவனைப் பணிந்து வேண்டினர். அவன் இசையவில்லை. இத்துடன் வேறொரு கவலையும் ஏற்பட்டது. ஜெர்மனிக்குச் சென்றிருந்த ஸர் ரோஜர் கேஸ்மென்டு, போதிய ஆயுதங்கள் இல்லாமையால் எழுச்சி பயனற்றதாகும் என்று எண்ணி, அதை அறிவிக்க ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் அயர்லாந்துக்கு வந்தார். அவருடன் வந்த இரு நண்பர்கள் உள் நாட்டில் புகுந்துவிட்டனர். ஆனால், ஸர் ரோஜர் மட்டும் போலீஸாரால் கைதியாக்கப்