பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மைக்கேல் காலின்ஸ்

46


கடத்தின்ை: ஒகானல் பாலத்தின் இருபுறங்களிலும் இருந்த கட்டிடங்கள் யாவும் தொண்டர்கள் கைவசமாயின. தொழிற்சங்கத் தொண்டர்கள் சுமார் 24 பேர்கள் டப்ளின் மாளிகையைப் பிடிப்பதற்கு விரைந்து சென்றர்கள். அம்மாளின்க மட்டும் அவர்கள் கையில் சிக்கியிருந்தால், தேசம் முழுதும் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டிருக்கும். ஆல்ை அங்கிருந்த காவற்காரன், தொண்டர்கள் உள்ளே புகுமுன்னல், இரும்புக் கதவை அடைத்துவிட்டான். ஒரு போலீஸ்காரன் கொல்லப்பட்டான். தொண்டர்கள் வெளியேறி நகர மண்டபத்தையும் வேறு பல கட்டிடங் களையும் பிடித்துக்கொண்டு அங்கிருந்து மூன்று நாள் அரும் போர் செய்தார்கள். தொண்டர்களிற் பலரும் அவர்கள் தலவனும் களத்தில் மடிந்தனர். சாரணர்கள் சிலர் பீனிக்ஸ் தோட்டத்திலிருந்த வெடிமருந்துச்சாலையில் தீவைக்க ஓடினர். மருந்தைப் பற்றிக்கொள்ளு முன் ல்ை எதிரிகள் தீயை அனைத்துவிட்டார்கள். பல தண்டவாளங்களும் பாலங்களும் வெடிமருந்தில்ை தகர்க்கப்பட்டன. முதலாவது படை மாதாகோவில் தெருவிலும் அதன் பக்கத்திலும் பலவிடங்களைப் பிடித் துக்கொண்டது. இரண்டாவது படை ஒரு தொழிற் சாலையையும் பல மாளிகைகளேயும் பிடித்துக்கொண்டது. மூன்ருவது படைக்கு, இப்பொழுது பெரும் புகழுடன் ஐரிஷ் குடியரசின் தலைவராக விளங்கும் ஈமன் டிவேலரா தலைமை வகித்திருந்தார். அந்தப் படை ஒரு ரயில் ஸ்டேஷனயும், ரயில் பாதையின் பெரும் பாகத்தையும், பல ரஸ்தாக்களேயும், வீடுகளேயும் கைப்பற்றியது. நான் காவது படையில், பின்னல் ஐரிஷ் சுதந்திர அரசாங் கத்தின் தலைவராக வந்த காஸ்கிரேவ் பணியாற்றி வந்தார். அதே படையில்தான் கதல் புருகா என்னும் அசகாய சூரன்