பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈஸ்டர் கலகம்

47


உபதளகர்த்தகை நின்று போராடிவந்தான். போரில் அவன் உடலிலே குண்டுகள் பட்டு இருபத்தைந்து காயங்கள் ஏற்பட்டன. அத்தனே காயங்களுடனும் அவன் சண்டையை கிறுத்தவில்லை. கலக நெருப்பைப் பற்றவைத்துவிட்டால் ஜெர்மன் ஆயுதங்களே இறக்குமதி செய்யலாமென்பதும், அதன் பின் தேசம் முழுதும் போரில் குதித்துவிடும் என்பதும் தொண்டர்களுடைய நோக்கம். ஆனால், எதிர்பாராத விதமாக ஆயுதக் கப்பல் பிடிக்கப்பட்டுவிட்டது. மாக் னில் எழுச்சிக்கு எதிராக உத்தரவுகள் பிறப்பித்தான். தேசத்தின் சில பாகங்களில் தொண்டர்கள் போராடி வந்த போதிலும் மொத்தத்தில் அவர்களுடைய ஏற் பாடுகளில் பெருங் குறைகள் இருந்தன. எனினும், .டப்ளின் கேரில் சந்திகளிலும் விதிகளிலும், மிக்க வலிமை யுள்ள ஆங்கிலத் துருப்புக்களேச் சிறு சிறு கூட்டத்தா ரான தொண்டர்கள் பல நாள் எதிர்த்துப் போராடி வந்தது ஆச்சரியமாகும். தொண்டர்களுடைய செய்கை களப் பார்த்தால், வெற்றி எவ்வாருயினும், தாங்கள் தியாகம் செய்யும் பாக்கியம் பெறவேண்டும் என்ற நோக்கமே கொண்டிருந்தார்கள் என்று புலயிைற்று. ஆனல் போரில் தியாகபுத்தியும் வீரமும் மட்டும் இருந் தால் போதுமா ? யுத்த தந்திரம் இல்லாவிட்டால் இவை விழலுக்கு இறைத்த நீரல்லவா! தபால் காரியாலயத் தைப் பிடித்தவர்கள் அதிலே தாற்காலிக அரசாங்கத் தின் தலைவர்களே கிறுத்திவைத்தது பெரும் பிழையா யிற்று. இதுபோலவே, தேவையில்லாத பல கட்டிடங் களேப் பிடித்ததால், அவற்றைப் பாதுகாப்பதற்குத் தொண்டர்க்ளேப் பல விடங்களிலும் சிதறி நிறுத்த