பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெயில் ஐரான் 79 H+ = = - வந்தான். அவனுடைய அங்க அடையாளங்கள். ஒவ் வொரு போலீஸ்காரனுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தன. பல போலீஸார் அவனைத் தேடிக்கொண்டிருந்தனர். அவர்கள் யாவர்க்கும் நடுவே அவன் கினைத்த பொழு தெல்லாம் சைக்கிளிலே ஏறிக்கொண்டு சுற்றி வந்தான். பகலில் வெளியேற அவன் அஞ்சுவதில்லே. பொய் மீசை, போலி வேடம் முதலிய உதவிகள் இல்லாமலே, அவன் டப்ளின் தலைநகரிலும் மற்ற இடங்களிலும், பல்லாயிரம் போலீஸாரிடையிலும், ஒற்றர்களிடையிலும் திரிந்து வந்தான். தேசிய எழுச்சியை வேரோடு கல்லி யெறிவ தாகச் சபதஞ்செய்து நின்ற அதிகாரிகள், புரட்சிக்கு வித்தாய், அதிகார ஆணவத்தை உள்ளிருந்தே எரிக்கும் கனலாய் விளங்கிய காலின்ஸை மட்டும் கைதிசெய்யவோ சுட்டுத்தள்ளவோ முடியாமல் இருந்தனர். காலின்ஸ் தாய்ப்பாஷையில் இனிமையாகப் பேசுவ தோடு ஆங்கிலத்திலும் மிக்க பாண்டித்தியம் பெற்றிருந் தான். அவன் ஆங்கிலத்தில் எழுதில்ை அது தெள்ளத் தெளிவாயிருக்கும். அவனுடைய கருத்துக்களுக்கு யாரேனும் தக்க ஆராய்ச்சியுடன் மறுப்பு உரைத்தால் அவன் பொறுமையோடு கேட்பது வழக்கம். ஆல்ை, சோம்பலினலோ, கவனக் குறைவாலோ, கோழைத்தனத் தாலோ, எவரேனும் ஆட்சேபித்தால், அவன் பொறுத் துக்கொண்டிருப்பது அபூர்வம். அச்சமயம் அவன் சீறிப் பாய்வான். அவனுடைய எல்லையற்ற ஊக்கமும், இடை விடாத உழைப்பும், குன்ருத வீரமும் அவனேச் சோம் பேறிகளுக்குப் பணிய விடுவதில்லை. மற்றும் இளைஞர் களேப் பிடிக்கும் பல தீய வழக்கங்களிலிருந்தும் அவன் தப்பியிருந்தான். மதுவகைகளே அவன் மிதமிஞ்சிப்