பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெயில் ஐரான் 85. பட்டிருந்தது. அறிக்கையின் பின்னல் ஒட்டி நின்ற, பயமுறுத்தலே எவரும் உணராமலில்லை. i. ஆல்ை ராணுவத்தில் ஒருவரும் சேருவதாய்க் காணவில்லே. அதற்குப் பதிலாகத் தொண்டர் படையில் பலர் கூட்டங் கூட்டமாய்ச் சேர்ந்துவந்தனர். ஜூலை மாத ஆரம்பத்தில் ஸின்பீன் சங்கமும், தொண்டர் படையும், கெயிலிக் பாஷா சங்கமும், வேறு பல சங்கங்களும் சட்ட விரோதமானவை என்று விளம் பரப்படுத்தப்பட்டன. தேசத்தில் எந்த மூலையிலும் பொதுக் கூட்டமோ ஊர்வலமோ நடத்தக் கூடாது என்று ஆங்கில ராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவுகள் வந்தவுடன் பொதுக் கூட்டங்கள் அதிகமாய்க் கூட்டப்பட்டன. மாரி பொழிவது போல் சொற்பொழிவுகள் நடைபெற்றுவந்தன. பேசியவர்கள் எல்லோரும் கைதிசெய்யப்பட்டனர். பந்தய விளேயாட்டு கள் கூடத் தடைசெய்யப் பட்டிருந்தும் கிற்கவில்லை. ஜனங்கள் ஆயிரக்கணக்கில் சென்று விளேய்ாட்டுகளைப் பார்த்துவந்தனர். காட்டிலே தன் உத்தரவுகள் காற்றில் பறக்கவிடப் படுவதைக் கண்ட அரசாங்கம் சிறைக்குள்ளிருந்த தேச பக்தர்கள் மேல் சீறிப் பாய்ந்தது. பெல்பாஸ்ட் சிறையில் போலீஸார் உட்புகுந்து, தொண்டர்களே அறைகளுக்கு வெளியே இழுத்துத் தள்ளி, தடிகளால் அடித்தனர். அவர்களுடைய கைகளைப் பின்புறமாகக் கட்டி, தீயணைக் கும் குழாய் மூலம் தேகங்களின் மேல் ைேரப் பாய்ச்சி, மூன்று நாள் அப்படியே கனேந்த உடைகளுடனும் கட்டிய கைகளுடனும் அவர்களே கிறுத்திவைத்தன்ர். இத்துடன் வேறு தண்டனைகளும் விதிக்கப்பட்டன.