பக்கம்:மொழியின் வழியே.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 143

சைவ சமயத்தையும், அந்தச் சமயத்தின் அறங்களையும் சைவர்கள் போற்றி வளர்த்தார்கள். வைணவ சமயத்தையும், அந்தச் சமயத்தின் அறங்களையும், வைணவர்கள் போற்றி வளர்த்தார்கள். எல்லாச் சமயத்துக்கும் பொதுவான அறங் களைக் கூறிய ஆசிரியர்கள் எவர்களோ, அவர்களை எல்லாச் சமயத்தார்களுமே ஒன்று போலக் கவனிக்காமல் இருந்து விட்டார்கள்.

கீதையும், திருமந்திரமும், திருவாசகமும், திருவாய் மொழியும் பரவிய அளவு திருக்குறளும், முதுமொழிக் காஞ்சியும், அறநெறிச்சாரமும் பரவாமற் போனதன் காரணம் இதுதான் என்று நினைக்கிறேன்.

மனித வாழ்க்கைக்குச் சமய உணர்வும், சமயச் சூழலும் இன்றியமையாதவைதாம். ஆனால், பொது அறங்களைக் கடைப்பிடித்து வாழ வேண்டியது சமயங்களைக் கடைப் பிடிப்பதைவிடச் சிறந்த காரியம். சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிக் குளிர்ந்த நிலப்பரப்பே 'பூமி’ என்று கூறப்படுவது போல் பொது அறங்களிலிருந்து பிரிந்து கிளைத்து விரி வடைந்தவையே சமயங்கள். . .

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" - .. என்று இவ்வாறு உலகுக்கு இறைவனின் இன்றியமையாமையை மட்டும் வற்புறுத்தி அவ்வளவில் அமைவது அற நூல். - "தீர்த்தம் என்பது சிவகங்கையே

ஏத்தருந்தலம் எழிற் புலியூரே மூர்த்தி அம்பலக் கூத்தனது உருவே' என்று சிவகங்கைத் தீர்த்தமும், புலியூரும், கூத்தப் பெருமானுமே இன்றியமையாதவை எனப் பொது அறத்தைக் குறுக்கிப் பிரித்துத் தன் எல்லைக்கு ஏற்ப ஆக்கிக் கூறுவது சமய நூல்.