பக்கம்:மொழியைப் பற்றி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியைப் பற்றி....

கா. அப்பாத்துரையார் போன்றோர் மொழிச் செப்பத்திற்கும், செழுமைக்கும் பன்முக மொழி வழி கருத்தூற்றைச் செந்தமிழில் தர முன்னோடி களாயினர். இன்றும் நம்மிடையே ம. இலெ. தங் கப்பா,இரா. இளங்குமரன், இரா. மதிவாணன், கு. பூங்காவனம், தமிழ மல்லன்.துேரை. மாணிக் கம் போன்ற பல எழுச்சியுற்ற பல திறன்மிக்க அறிஞர்கள் பலர் :

'உணர்ந்திடுக.தமிழ்த் தாய்க்கு

வருந்தீமை உனக்குவரும் தீமை அன்றோ?

பிணிநீக்க எழுந்திரு நீ

இளந்தமிழா, வரிப்புலியே

பிற்றை நாளுக்கு

அணிசெய்யும் இலக்கியம் செய்

அறத்தைச் செய்! விடுதலை கொள்!

அழகு நாட்டில்

பணி செய்வாய் தமிழுக்குத்

துறைதோறும் துறைதோறும்

பழநாட்டானே' என்ற குரட்கு எதிரொலியாய் ஏற்றுச் செய்கின்றனர்.

இந்தச் செந்தமிழ்ப் பணியைப் பலர் உலகை உற்றுப் பார்த்து உண்மை அறிய விரும்பாமல் அழிந்தாலும், நடைமுறைப் படுத்தும் ஆற்றலும் துணிவும் இல்லாமல், காசுக்காகவும் காளாம்பி புகழுக்காகவும் தம்மையே விற்று வாழ்கின்றனர்.

நான் சோவியத்து நாட்டிற்குச் சென்றிருந்த போது பொதுமைப் புரட்சியில் ஒவ்வொரு மொழியின் மேன்மையையும், அதன் முதன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/10&oldid=713807" இலிருந்து மீள்விக்கப்பட்டது