பக்கம்:மொழியைப் பற்றி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. மொழியைப் பற்றி

ஈடுபடவும், மேலும் சிந்திக்கவும் முற்படுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே எழுதியிருக்கிறார். மிகவும் இன்றியமையாத இடரான வேலையைச் செய்ய வாசகர்களைத் தூண்டுகிறார். அதற்கு வேண்டிய முதல் உதவியை மட்டும் செய்துவிட்டு, தொடர்ந்து தாங்களே தனியாக முயற்சிகளில் ஈடுபட்டுத் தெரிந்துகொள்ள பயிற்சி தருகிறார்.' இப்படி இலெனின் எழுத்தாளர்களின் கடமையைப் பற்றியும், எடுகள் நடத்துவோர், எண்ணத்தின் பளிங்கென, வாசகரின் கையேடாக இயங்கவேண்டும் என்றும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார். நல்லதைச் செய்வதில் ஈடுபட்டு விட்டால் மட்டும் போதாது, அதைப் பொறுப்பு உணர்ச்சியுடன் செப்பமான மொழியில் சொல்லவேண்டும் என எழுத்தாளருக்கு எச்சரிக்கை விடுத் திருக்கிறார். ஒருவாறு எழுத்துகளைப் படிப்பவர்கள், அதிலிருந்து பயன் பெறவேண்டும், அதுவே சரிதிட்பமான எழுத்துகளின் சிறப்புப் பயன் என்பதை நாம் உணர்கிறோம். 'குறிப்பிட்ட ஒரு சாரர் தங்களின் (மொழி-இனம்) கோரிக்கை களை, ஆர்வங்களைக், குறைகளைத் தேவைகளை வற்புறுத்தி வெளியிடும் கருத்துகளைப் புறக்கணிப்பதும் சரியில்லை. அவர் களின் கருத்துகளைப் புறக்கணித்து, அவர்கள் வெளியிட்கருத்துகளுக்குத் தவறான எண்ணம் கற்பிக்க முயல்வது நல்ல தில்லை. அப்படிச் செய்வது சமன்மைப் புரட்சிக் கருத்து களுக்குப் புறம்பானதாகும். அது கொலைச் செயலுக்கு. ஒப்பானதாகும்.' என்று இலெனின் மாற்றான் கருத்தை மறைத்து, புறக்கணித்து விட முயலும் செயலையும் கண்டித்திருக்கிறார். 'கொள்கை பரப்புத் துறையிலும், விளம்பரத் துறையிலும் ஈடுபட்டிருப்பவர்கள், அன்றைய வரலாற்றை அவ்வப்போது தெளிந்த மொழியில் தொடர்ந்து எழுதிக் கொண்டே வர வேண்டியது அவர்களின் கடமையாகும். நாள் அடிப்படையில் எழுதப்பட்டு வரும் தகவல்கள், இயக்கத்தில் ஈடுபட்டிருப்பவர் களுக்கு உதவியாக அமையவேண்டும். புரட்சியில் ஈடுபட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/30&oldid=713827" இலிருந்து மீள்விக்கப்பட்டது