பக்கம்:மொழியைப் பற்றி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 33

"உருசிய நாடு புதிய புரட்சிப் பாதையின் உயர் நிலையினை நோக்கிச் செல்கிறது என்கிறோம், அதுதான்் உண்மை. இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம்? உருசிய நாடு இன்னும் அடையவேண்டிய நிலையை அடையவில்லை என்பதுதான்். அதுதான்் தருக்க முறையிலும், நடைமுறை யிலும் நாம் புரித்துகொள்கிறோம். ஆனால் அந்தப் புரட்சி இலக்கை நோக்கிச் செல்வதையே, மிகப் பெரியதாக வண்ணிக் கப்படுகிறது. இப்படி வண்ணிப்பது அறியாமை நிரம்பிய மடமை. நாம் இலக்கை நோக்கிச் செல்வதைக் கொண்டே, நம் எதிர்காலம் இப்படித்தான்் அமையும் என்று வண்ணிக்கப் படுகிறது. இத்தத் தவறு எப்படி உண்டாகிறது என்றால், இன்று நாம் எதிர்நோக்கியுள்ள நிலைமைகளைச் சீராகப் புரிந்துகொண்டு பெறவேண்டிய தெளிவைப் பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது.' என்று பரபரப்புடன் ஒரு முடிவுக்கு வந்து, தம் அறிவாற்றலை முழுமையாகப் பயன்படுத்தாதவர்களை இலெனின் சுட்டிக் காட்டுகிறார். புரட்சி வகுப்புப் போராட்டத்தின் தலைவன், புரட்சிநோக்கினன் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு என்ன என்பதை அவர் எந்த அளவிற்கு உணர்ந்திருக்கிறார் என்பதை நாம் காண்கிறோம். வெற்று ஏமாற்றுச் சொற்களும், கற்பனை களும் புரட்சிக்கு எவ்வளவு கேடாக அமையும் என்பதை அவர் தெளிவாகக் கூறி இருப்பது வருமுன் கூறி மக்களை மயக்கும் இன்றைய புரட்சியாளருக்கு ஒரு நல்ல எச்சரிக்கையாகும். இப்படிப்பட்ட தவறுகள் செய்வதால் பல நேரங்களில் புரட்சிகள் தோல்வியில் முடியும் என்பது வரலாறு புகட்டும் உண்மை.

女 * வணிகர்களும் இடைநிலை மக்களும் இயக்கும் குடியரசு பற்றி கவர்ச்சியாகப் பேசப்படுகிறது. உள்ளத் தூய்மையுடன் பல கூறப்படுகின்றன. ஏராளமான வாக்குறுதிகள் தாராளமாக வழங்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் அந்தக் குடியரசில் நடப்பது என்ன? உரிமை பற்றியும், சமநிலை பற்றியும் வெறும் புகழாரம் சூட்டப்படுகிறது. ஆனால், உரிமையைப் பறிக்கவும்,

Gluor-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/35&oldid=713832" இலிருந்து மீள்விக்கப்பட்டது