பக்கம்:மொழியைப் பற்றி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 51

தன்னுரிமை - என்றால் அதில் பலருக்கும் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. பலர் தவறாகப் புரிந்துக்கொள்வது தான்் இதற்குக் காரணம். எனவேதான்் தன்னுரிமை' என்பதற்குப் மாறாக, பிரிந்துபோகும் உரிமை' என்று தெளி வாகக் கூறவேண்டும் என்கிறேன். 1917-ஆம் ஆண்டில் ஆறு. மாதங்கள் நாம் பெற்ற பட்டறிவை நினைத்துப் பார்க்கும் போது பிரிந்துபோகும் உரிமையைப் பின்லாந்து, உக்ரைன், அர்மேனியா, போன்ற பல ஒடுக்கப்பட்ட இன மக்களுக்குத் தந்தாகவேண்டும். நாம் புரட்சியில் வெற்றி பெற்று ஆட்சி யைக் கைப்பற்றிய உடன் பிரிந்து போக விரும்புகிறவர்களுக்கு அந்த உரிமையை அளிப்போ ம்; அதே நேரத்தில் நம் கட்சியின் கொள்கை பிரிந்து போவதை நாமே ஊக்குவிப்பதன்று’’ "சோவியத்து அமைப்பு-என்பது சுரண்டப்பட்டுவந்த மக்களின் அமைப்பு. உழைக்கும் பாட்டாளி மக்களின் அமைப்பு. அவர்கள் அரசை அனைத்து வகைகளிலும் இயங்குவதற்கு உதவி புரிகிறார்கள். அரசு தொழிலாளர்கள்-சுரண்டப் பட்ட வர்களின் பாதுகாவலனாக இயங்குகிறது. மக்கள் உரியவர் களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் சீராக இயங்குகிறவர்களா என்பதை மேற்பார்வையிட சோவியத்து அமைப்பு வழிகாட்டு கிறது. தொழிலாளர்களையும், சுரண்டப்பட்டுவந்த மக்க ளையும், ஏழைப் பாட்டாளி மக்களையும் ஒன்றுபடுத்தி அவர் களுக்கு நல்வாழ்வு தருவதே சோவியத்து அமைப்பு. *அன்புள்ள வரலாற்று ஆசிரியர்களே, அரசியல்வாதிகளே! எதிர்ப்பாளர்' என்கிற சொல்லுக்குரிய பொருளை நீங்கள் அறியவேண்டும் என்று கேட்டுக்கொள்வதில் தவறில்லை என்று கருதுகிறேன். - -

'அமைதியை நாடி, பாராளுமன்ற முறையில் சிக்கல்களுக்குத் தீர்வுகாண்பதே எதிர்க்கட்சியினரின் பணியாகும். அதாவது, இதற்குப் புரட்சிக்கான தேவை ஏதும் நாட்டில் இல்லாதிருக்க வேண்டும். புரட்சியின்போது இழிவான எதிரிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டி இருக்கிறது. மேலும் பிற்போக்கு ஆற்றல்களையும் முறியடிக்கவேண்டிய நிலை புரட்சியின் போதும் தேவையாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/53&oldid=713850" இலிருந்து மீள்விக்கப்பட்டது