பக்கம்:மொழியைப் பற்றி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதும் வகையும், விதிமுறையும்

எந்த நோக்கத்திற்காக இந்தச் சொல் பயன்படுத்தப் படுகிறது, எந்தக் காரணத்திற்காக இந்தக் கடுமையான சொல் எடுத்தாளப் படுகிறது என்பதை எல்லாம் தெளிவாகவோ, குறிப்பாகவோ, விளங்காத நிலையில், எதிரிகளைக் குறை கூறவும், அவர்களின் செல்வாக்கைக் குறைக்கவும் இழி சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. எதிரிகளை வீழ்த்த வேறு வழி இல்லாதபோது, இந்த முறை: இறுதியாகக் கையாளப்படுகிறது என்பது தெளிவு என்று இலெனின் தரக்குறைவான அாசியல்வாதிகள் எப்படி எல்லாம் தங்கள் எதிரிகளை முறியடிக்க முற்படக்கூடும் என்பதை விளக்கி இருக்கிறார்.

女 'எந்த ஒரு நூல் ஆசிரியரின் நடையும் மேன்மையற்றதாகவோ, எண்ணங்கள் தெளிவற்றுப் புகை கப்பியது போலவோ அமையக் கூடாது. ’’

會 ஒரு தீர்மானம் தெளிவாகவும் பயன்படுத்தப்படும் மொழியில் பிழை எதுவும் இல்லாமலும் எழுதப்பட வேண்டும். அரசியலில் காணப்படும் பல்வேறு போக்குகளையும் கருத்தில் கொண்டு எழுதப்பட வேண்டும். ஏதோ ஒரு சிலரின் கருத்தை, நல்ல எண்ணத்தை மட்டும் வெளிப்படுத்தும் முறையில் தீர்மானம் எழுதப்படக் கூடாது. ’’ என இலெனின் எல்லோருக்கும் பொதுவாகத் தீர்மானங்களை எழுதும் போது கடைபிடிக்க வேண்டிய முறையை விளக்கி இருக்கிறார். ஒரு சிலரின் கருத்து மட்டுமே எதிரொலிக்கின்ற முறையில் தீர்மானங்கள் எழுதப்படக் கூடாது என்பதையும் நல்ல நோக்கத்துடன் எடுத்துக் கூறியிருக்கிறார்.

命 எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. அதுவும் ஒர் அறிமுகமில்லாதவனைப் பற்றியதாகும். கடந்த காலத்தில் சில மெய்மையினர் எதைப்பற்றியோ கலந்துரையாடிக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/56&oldid=713853" இலிருந்து மீள்விக்கப்பட்டது