பக்கம்:மொழியைப் பற்றி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலெனின் 55

இருந்தனராம், அப்போது அவர்களுக்கு முன்பின் அறிமுக மில்லாத ஒருவன் அங்கு வந்தான்ாம். அவர்கள் பேசிக்கொண் டிருந்தபொது அவன் வாய் திறக்காமல் அமைதியாக இருந் தான்ாம். அந்த மெய்மையினரில் ஒருவன் அவனைப் பார்த்து நீ அறிவாளன் என்றால், நீ மிகவும் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறாய். நீ ஒரு முட்டாள்தான்் என்றால், நீ மிகவும் அறிவாளனாக நடந்துகொள்கிருய்' என்று கூறினர். இந்தக் கதையை இலெனின் நினைவுப் படுத்திக் கூறியிருப் பதைப் பார்க்கும்போது அவர் யார் உண்மையான முட்டாள் என்பதை எவ்வளவு நயமாகக் கூறி இருக்கிருர் என்பது தெளி வாகிறது.

★ * திரு. பிளகானோவ் பேசும்போது அழகாகப் பேசுகிறார். மிக வேடிக்கையாகப் பேசுகிறார். கவர்ச்சியாகப் பேசுகிறார். இது யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவருடைய பேச்சு முழுவதையும், அப்படியே எழுதி ஆராயும்போது, அதுவும் மெய்மைய முறையில் ஆய்வு செய்யும்போது தான்் இடர்ப்பாடு ஏற்படுகிறது. ’’ என்று இலெனின் சொற்பொழிவாளர்கள் அழகாக, கவர்ச்சி யாகப் பேசிவிட்டால் மட்டும் போதாது, அந்தப் பேச்சை நேரில் கேட்க முடியாதவர்களுக்கும், பிற்காலத்தில் படிப்பவர்களுக்கும் பயன் உள்ள முறையில் அமைந்திருக்க வேண்டும் என்பதை நாகரிகமாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

★ குடியரசைப் பற்றிப் பேசும் சொற்பொழிவாளர்கள், குடியரசு பற்றி எப்படிப் பேசுவது என்பதைத் தெரிந்துதான்் பேசவேண்டும். ஏதோ ஒரு கூட்டத்தில் பேசுவது போலவும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களிடையே பேசுவது போலவும், மக்களிடையே பேசுவது போலவும், மாணவர் இடையில் பேசுவது போலவும், மிக மிகப் பொது முறையாகக், குடியரசைப் பற்றிப் பேசக்கூடாது. ஒருவன் கொள்கைப் பரப்பாளனானாலும், கிளர்ச்சிக்காரன் என்றா லும், அவன் பேசும் பாணியை உயர்ந்ததாக அமைத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/57&oldid=713854" இலிருந்து மீள்விக்கப்பட்டது