பக்கம்:மொழியைப் பற்றி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மொழியைப் பற்றி....

மொழி நீண்ட, விரிந்த, பரவலான பகுதியில் பேசப்படுகிறது. உருசிய மொழி மற்ற மொழிகளைவிட வளமடைந்த உயரிய மொழியாகும்.

நம் முன்னோர்கள் எழுத்துப் படைப்புகளுக்கான விதிமுறைகள், கோட்பாடுகளைப்பற்றி அறியாத காலத்தில்.நல்ல நூல்களைப் படைத்து நமக்கு அளித்திருப்பதிலிருந்து, நமது மொழியின் சிறப்பையும், வளத்தையும், எழிலையும், ஆற்றலையும் நம்மால் தெளிவாக அறிய முடிகிறது.

- மிகயேல் லோமனாசேரவ்

நமது உருசிய மொழி இலத்தீன் மொழியின் வளர்ச்சியி லிருந்தோ, கிரேக்க மொழியின் சொற்களிலிருந்தோ வளர்ச்சி பெற்றதாக அயல்நாட்டு அறிஞர்கள் குறிப்பிடவில்லை.

- - சி. ஆர். தெர்சாவின்

இன்றுள்ள மொழிகளில் உருசிய மொழி மட்டுமே எதனையும் தெளிவாக விளக்கக் கூடிய அமைப்பையும், எதையும் அழுத்தம் திருத்தமாக எடுத்துக் காட்டக் கூடிய ஆற்றலையும், பல்வேறு வகையில் தெளிவு படுத்தக் கூடிய வலிமையும் பெற்ற சிறந்த இலக்கிய மொழியாக விளங்குகிறது.

- நிகோலாய் தோப்ரோலியூபவ்

உலக மொழிகளில் மிகவும் வளமான மொழியாக விளங்குவது

உருசிய மொழி என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.

-விசாரியன் பெலின்சுகி

உருசிய மொழி மக்களுக்கு எளிதான் மொழியாகவும், எதனை

யும் முழுவல்லமையுடன் எடுத்துக் கூறக்கூடிய வன்மைமிக்க, வியப்புக்கு உரிய நல்ல மொழியாகத் திகழ்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/72&oldid=713869" இலிருந்து மீள்விக்கப்பட்டது