பக்கம்:மொழியைப் பற்றி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியைப் பற்றி....

மேலை நாட்டார்க்கு மொழி என்பது ஒரு கருவி - எண்ணங்களின் ஊர்தி. ஆ ன ல் தமிழர்க்கு அது உயிர்.

தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

80 අා ·ෙදා ஒ 参 貌

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ !

●● 3ధి o 斡 ణ G

என்று பாவேந்தர் பாரதிதாசனார் தமிழியக்க மாகவே வாழ்ந்தார்.

சங்க காலத்திற்குப பிறகு தமிழச் சமுதாயம் வந்தேறிகளால் - சமயவாணர்களால் - அடுத் தடுத்தப் படையெடுப்புகளால் சீரழிந்தது. ஒரு நாடும் நாட்டு மக்களும் நாகரிகத்தால் - பண் பாட்டால் சீரழிகிறபோது மொழியும் சீரழியும் என்பது வரலாற்றுண்மை.

உலக நாகரிகத்தின் கொடுமுடியில் வாழ்ந்த நாடுகள் சீரழிந்தாலும் மீண்டும் சீர்பெற்றன. அந்தோ! என் தாய்த் தமிழகம் வந்தேறிகளின் வலக்கரத்தினின்றும் இன்றும் மீண்டபாடில்லை.

நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி, வஞ்சனையாளரின் வாய்ப்பட்டு வாழ் கின்றனர் தமிழர். திருவள்ளுவனைப் போன்ற தன்னேரில்லாச் சீர்திருத்தவாணன் காலம் முதல் அறிஞர் அண்ணா காலம்வரை இந்த நிலை மாற வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியைப்_பற்றி.pdf/8&oldid=713805" இலிருந்து மீள்விக்கப்பட்டது