பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i26

(2) முதல் வேற்றுமைக் கருத்தா ஆலுருபேற்று மூன்றாம் வேற்றுமைக் கருத்தாவாயின், அதன் தொழில் செயப்பாட்டுப் பொருளைத் தரும். இஃது அருகிய வழக்காகும்.

அஃது என்னல் உடைந்தது. (3) செய்வினைப் பகுதியோடு உண், படு முதலாய துணை வினைகள் சேர்ந்து செயப்பாட்டு வினையாதல் உண்டு. கொலையுண்ட்ான், உதைபட்டான் (4) பொதுவாகச் செயப்பாட்டு வினைகளையும் செய் வினையாகக் கூறுதல் தமிழ் மரபாகும்.

எழுதிய நூல் வேண்டும் (எழுதப்பட்ட) பாடிய பாட்டு நன்று (பாடப்பட்ட) உண்ட சோறு நல்லது (உண்ணப்பட்ட) இவை அருகிய வழக்காகும் 7. இரட்டைக் கிளவி

ஒசை, குறிப்பு, பண்பு பொருள்களைத் தரும் அடிச் சொற்கள் இரட்டித்துப் புதுப்பகுதிகள் தோன்றுதல் உண்டு. அவை இரட்டைக் கிளவி எனப்படும்.

சலசலப்பு-ஓசை பற்றியது பரபரப்பு-குறிப்புப் பற்றியது பசபசப்பு-பண்பு பற்றியது 8. வினையடியாகப் பிறக்கும் பெயர்கள்

(1) தொழிற்பெயர்: வினைப் பகுதியோடு அல், தல், கை, மை முதலிய விகுதிகள் சேர்ந்து தமிழில் தொழிற் பெயர்கள் அமையும்.

ஆடல், ஒடுதல், உண்கை, உண்ணுமை. அவ்விகுதிகளைப் பெருமல் தனித்துத் திரிந்தும் திரியாதும் நிற்றலும் உண்டு. அவை முறையே முதனிலைத் தொழிற் பெயர் எனவும், முதனிலை திரிந்த தொழிற் பெயர் எனவும் வழங்கும்.

அறி, அடி, கடி-முதனிலைத் தொழிற் பெயர்கள்