பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

கோள், வீடு, ஆடு-முதனிலை திரிந்த தொழிற் பெயர்கள் (2) வினையாலணையும் பெயர் : தெரிநிலை வினையும் குறிப்பு வினையும் தம் செயலை உணர்த்தாது வினையுடைப் பொருளை உணர்த்துங்கால் அவை வினையாலணையும் பெயர் எனப்படும். அவை எழுவாயாக நின்றும், ஏனைய உருபுகளை ஏற்றும் வரும்: காலத்தையும் காட்டும்.

வந்தானைக் கண்டேன்-தெரிநிலை வினையாலணையும்

பெயர். பொன்னனைக் கண்டேன்-குறிப்பு வினையாலணையும்

பெயர். (3) வினயடிக் காரணப் பெயர் : வினைப் பகுதியோடு இ. ஐ, அம் என்னும் மூன்று விகுதிகளும் சேர்ந்து வினயடிக் காரணப் பெயர்கள் அமையும்.

அலரி (இ), பறவை (ஐ), எச்சம் (அம்)-வினை முதற்

- பொருளன ஊருணி (இ), தொடை (ஐ), நீத்தம் (அம்)-செயப்

படு பொருளன மண்வெட்டி (இ), பார்வை (ஐ), நோக்கம் (அம்)

கருவிப் பொருளன நகரமும் ஞகரமும் இடைநிலைகளாக நின்று சில் காரணப் பெயர்கள் அமைவதும் உண்டு. பொருநன், பொருநர் அறிஞன், அறிஞர் (4) வினையடி ஆக்கப் பெயர்கள் : வினையடிகள் வல்லினம் இரட்டித்தும், முதல் நீண்டும், ஆக்க விகுதிகள் பெற்றும் பிற பொருள்களேத் தருதல் உண்டு. அவை ஆக்கப் பெயர்கள் எனப்படும்.

எழுது - எழுத்து - வல்லினம் இரட்டித்தது மின் - மீன் - முதல் நீண்டது இரு-பு - இரும்பு - ஆக்க விகுதி பெற்றது.