பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

அமைப்புகளும் திராவிட மொழிக்கே உரிய தனிச் சிறப் பியல்புகளாகும்.

திராவிட மொழியில் வடசொற்கள்

திராவிட மொழிகளில் பல வடசொற்கள் புகுந்துள்ளன. அவற்றுள் சிலவற்றை மாற்றாமலும்,சிலவற்றைத் தம்மியல்புக் கேற்பத் திரித்தும் திராவிட மொழிகள் ஏற்றுக்கொண் டுள்ளன.

வடமொழி, திராவிடம் எனும் இரண்டனுக்கும் பொது வாக வழங்கும் சில சொற்களை ஆராய்ந்து, அவை திராவிட மொழிக்கே உரியன எனக் கால்டுவெல் தக்க சான்றுகளுடன் எடுத்துக்காட்டியுள்ளார். -

/இரு மொழிக்கும் பொதுவாக அமைந்த சொற்களுள் திராவிட மொழிகளுக்கு இன்றியமையாதனவாக இருப் பனவும் அடிச்சொற்கள் தெளிவாக அமைவனவும் திராவிட மொழிகளையே சாரும் என்பது கால்டுவெல் கருத்தாகும். .

நீர், மீன் எனும் தமிழ்ச் சொற்களுக் கிணையாக வட மொழியில் நீர, மீன எனும் சொற்கள் வழங்குகின்றன.

! இவை தமிழின்கண் அடிப்படைச் சொற்களாய் இருத்தலானும், பெருவழக்கின ஆகலானும், திராவிட மொழி களுள் பலவற்றில் வழங்கலானும், இவற்றுக் கிணையானசொற் களைத் திராவிட மொழிகளில் காண இயலாமையானும் திராவிடச் சொற்களே ஆகும். இவை தமிழினின்றே வட மொழிக்கண் சென்றிருக்க வேண்டும்.

சந்தனம் எனும் தமிழ்ச் சொல்லுக் கிணையாக வட மொழியில் சந்தன (Sandana) எனும் சொல் வழங்குகிறது. சாந்து, சாந்தம், சாது எனும் சொற்கள் தமிழின்கண் வழங்கலானும், கன்னடத்தில் சாது (Sadu) எனவும்,

1. Collected papers—L. 299