பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

தெலுங்கில் சாது (Cadu) எனவும் வழங்கலானும் இதன் அடிச்சொற்கள் திராவிட மொழிகளில் தெளிவாக விளங்குத லானும் இது திராவிடச் சொல்லேயாகும். வடமொழி திராவிடத்தினின்றும் கடன்பெற்றிருக்க வேண்டும்.

/ சாவு (தமிழ், கன்னடம்) என்பதற் கிணையாக வட மொழியில் சவ (Save) என்னும் சொல் வழங்குகிறது. இதன் அடிச்சொல்லாகிய சா என்பது திராவிட மொழிகளில் தெளிவாக விளங்குதலால் இது திராவிடத்தினின்றே வட மொழிக்கண் சென்றிருக்க வேண்டும்.

தமிழில் வளை யெனவும் கன்னடத்தில் பளெ (Bale) எனவும் வழங்கும் சொல்லுக் கீடாக வடமொழியில் வலய என வழங்குகிறது. இதுவும் திராவிடத்தினின்றே பெறப்

பட்டதாகும்.

தொல்வழக்கை ஒட்டியும் சொற்களின் தோற்றம் உறுதி செய்யப்படுகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் வழக்காறு பெற்ற சொற்களாயின் அவை திராவிட மொழிகளுக்கே உரியன எனக் கருத வேண்டியுளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு மூன்றிலும் வல்லி எனவும், கன்னடத்தில் பள்ளி (Batti) எனவும் வழங்கும் சொல்லுக் கீடாக வடமொழில் வல்லி என வழங்குகிறது. வள்ளி என்பது தமிழில் தாவரத்தை உணர்த்துகிறது. இதல்ை, வல்லி என்பது தமிழிலிருந்தே வடமொழிக்கண் சென்றிருக்க வேண்டும்.

பழங்காலத்து வழங்கிய பண்பாட்டுச் சொற்களுள்ளும் தொழில் நுட்பச் சொற்களுள்ளும் சிலவற்றை வடமொழியி னின்றும் திராவிடம் கடன் பெற்றிருக்கலாம்.

செடி, கொடிகளை உணர்த்தும் சொற்களைக் கடன் பெற்றது எனக் கூறுவதில் பொருளில்லை.

1. Collected papers—L. 300

$ - -பக். 301

3. t -பக், 304