பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223

தபு என்ற சொல்லிலிருந்துதான் தவறு என்ற சொல் உண்டாகி இருக்கவேண்டும். இம் மாற்றம் பழங்காலத் திலேயே நிகழ்ந்திருக்க வேண்டும். தப்பு (தவ்+பு) என்ற சொல்லும் தோன்றியிருக்க வேண்டும். -

தபு: தபுதி (பழஞ்சொற்கள்):

றகரம்

தொல்காப்பியம் றகரத்தை வல்லினம் எனக் கூறு கிறது. இன்று அது இடையின ரகரம் போலவே ஒலித்து வருகிறது

மேற்கு - மேர்க்கு (சோழர்-1076) விறகு-விரகு (சோழர்-1133) இரண்டாவது-இறண்டாவது (சோழர்-1072) ற்ற் த்த் என ஆதலும் உண்டு. மாவேற்றத்து-மாவேத்தத்து (கி.பி. 550)

பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை கன்னடக் கல் வெட்டுகளில் ரகர, றகர வேறுபாடு போற்றப்பட்டு வந்துள்ளது. 13 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு பேச்சுத் தமிழில் இவ் விரண்டிற்குமுள்ள வேறுபாடு மறைந்து விட்டது.”

பழந்தெலுங்கிலும் றகர, ரகர மாற்றங்கள் நிகழ்ந் துள்ளன.

இறங்கு (தமிழ்) எறகு, எரகு (தெலுங்கு)

எறகு(கன்னடம்)

. 1. C. D. P.–Luis. 89 2. C. D. P.-L. 97