பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

னகரம்

னகரமும், லகரமும் றகரமும் மாறி வருகின்றன.

பொன்-பொலிவு-பொற்கொடி சில் - சின் - சிற் பல் - பன் - பற்

னகரம்

னகரமும் ளகரமும் டகரமும் மாறிவருகின்றன.

கொள் - கொண் - வேள் -வேண் -வேட்கை

ஞகரம்

ஞகரம், நகரமாகவோ, பகரமாகவோ மாறி நிற்கிறது.

ஞண்டு-நண்டு (தமிழ்) ஞமலி (தமிழ்)-நெமலி (கன்,தெலுங்கு) ஞாலம்-நேல (தெலுங்கு)

தமிழில் ஆகார எகாரங்களோடு மட்டும் ஞகரம் மொழி முதற்கண் வந்தது. மலையாளம் ஞகரத்தை மொழி முதற் கண் முழுவதும் போற்றி வருகிறது.

ஞாயிறு-நாயிறு (சோழர் கல்வெட்டு) ஞான்று-நான்று (8ஆம் நூற்றாண்டு)

கன்னடத்தில் ஞகரம் சகரத்தோடு இணைந்து வருமே யன்றித் தனித்து வருவதில்லை.” .

யகரமும் ஞகரமும் மாறி வருதல் உண்டு.

யமன் - ளுமன் -நமன் யான் (தமிழ்)-ஞான் (மலையாளம்) நான் (பிற்கால வழக்கு) அப்பர் காலத்தில் நகரம் ஞகரமாக (அண்ண ஒலி யாக) மாறியுள்ளது. . . -

1. C. D. P. Lus. 136