பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

5. சொல்லிற்று மகரம், திரிந்து ங், ஞ, ந வாக அமையும்.

செம் - செங்காய், செஞ்சாந்து, செந்தார்.

இவ்வாறே தெலுங்கு, கன்னட மொழிகளிலும் மகரம் ஏனைய மெல்லினங்களாகத் திரியும்.

6. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வரும் வல்லொலி யும் சில இடங்களில் பகுதியின் ஈற்று எழுத்தின் திரிபாக அமையும். -

சார்-து-சாத்து (ர் - த்)

நீர்+து-நீந்து (ர் - ந்)

மழ்+கு-மங்கு (ழ் - ங்)

துய் +சு-துஞ்சு (ய் - ஞ்)

7. சில இடங்களில் விகுதியின் ஆற்றலாலும் மெல்லின மும் வல்லினமும் தோன்றும்.

சேர்+து-சேர்ந்து: சேர்த்து ஆழ்+து-ஆழ்ந்து ஆழ்த்து

8. ஓரினமாதல் (Assimilation): புணர்மொழிக்கண்ணும் தனிமொழிக்கண்ணும் நிக்ழும் திரிபு எனும் ஒலி மாறுதல் ஓரினமாதல் எனப்படும்.

(1) மெய் திரிதல் : இவை வருமொழி நோக்கித் திரிவன வும் நிலைமொழி நோக்கித் திரிவனவும், ஒன்றை ஒன்று நோக்கி இருவழியும் திரிவனவும் என மூவகைப்படும்.

நல் + சேர்க்கை-நற்சேர்க்கை-வருமொழி நோக்கி பொன்--நன்று-பொன்னன்று-நிலைமொழி நோக்கி கல்-தூண்-கற்றுண்-இருமொழி நோக்கி (2) உயிர் திரிதல் : உயிர் ஒலிகளுள்ளும் ஓர் ஒலி மற்றாேர் உயிர் ஒலியைத் தன்னினமாக மாற்றிவிடுதல் உண்டு.