பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. உயிர் ஒலி மாற்றங்கள்

1. திராவிட அடிப்படை உயிர் ஒலிகள் அ, இ, உ, எ, ஒ. என்பன. இவற்றின் நெடில் வடிவங்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்பன. அய் என்பதன் கூட்டு வடிவமே ஐ என்பது. அஃது அ, இ க்களின் கூட்டு வடிவம் எனவும் கருதப்படும். அவ்வாறே அவ் அல்லது அ, உ என்பதன் கூட்டு வடிவமே ஒள என்பது. எனவே, இவ்விரண்டையும் தனி எழுத்துகளாகக் கொள்வ தற்கு வழி இல்லை. இவை சேர்க்கை ஒலிகளாகும்.

தமிழில் குறில், நெடில் வடிவங்கள் மாறி வருதல் உண்டு.

வாழ் - வாழ்க்கை; வாழி - வழி வழக்கு - வாடுக (தெலுங்கு) -

பேர்-பெருமை-பெரிது.

யான்-எனக்கு: யணக்கு என்பதே பழைய வடிவாக இருத்தல் வேண்டும்.

நாம்-நமக்கு: நீன்-நினக்கு, சீற்-சிறுவன்; சிறியர்; கார்-கருமை, கரியது; போர்-பொருதல்; பார்-பாரு.

-நெடில்கள் குறிலாயின.

கண்-காண்; மின்-மீன்; விடு-வீடு; உண்-ஊண், உணவு கொல்-கோல்; வெல்-வேல்; கொழு-கோழ்; கொள்-கோள்; பண்-பாண்.

-குறில்கள் நெடிலாயின.

1. Comparative Dravidian phonology-Kamil Zvelebil 2 — P. 36