பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

2. பெயரிலும் வினையிலும் இவ் விருவகை வடிவங்கள் வழங்குகின்றன.

ஏனைய திராவிட மொழிகளிலும் இவ் விருவகை வடி வங்கள் வழங்குகின்றன என்பர்.

பணி (தமிழ்)-பனுசு (தெலுங்கு): பான் (பிராஹீ) ஆர், அரற்று (தமிழ்); அருவு (தெலுங்கு); அர (கொடகு)

க, ய, வ, இடையிடும் குறுகிய வடிவங்கள் நீட்சி பெறும் பொழுது இவ்வொலிகள் கெடுகின்றன.

பகல்-பால் (க, கெட்டது) தொகுப்பு-தோப்பு (கு, கெட்டது)

உயிர்-ஊக்கம் (ய, கெட்டது) துயில்-துங்கு-தூக்கம் (ய, கெட்டது) அவ்-ஆ- (சுட்டு) ஆயிருதிணை (வ, கெட்டது) உவகை-ஒகை (வ, கெட்டது) 3. தென்திராவிட மொழிகளில் பல சொற்கள் சகரம் கெட்டு உயிர் முதல் வடிவங்களாக வழங்குகின்றன.

சில் (பழந்திராவிடம்)-இல் (தமிழ்); இல்ல (மலை), சில (பர்ஜி) சய்ந்து (பழந்திராவிடம்) அய்ந்து (தமிழ்) சாறு (பழந்திராவிடம்): ஆறு (தமிழ்) சேரு (கூஇ); ஏர் (தமிழ்) 4. சில திராவிட உயிர் முதல் மொழிகளின் முன் துணை மெய்யான நகரம் இடம் பெறுதல் உண்டு.

ஈர்-பழந்திராவிடம்; நீர்-தமிழ் நீர், ஈரம்-மலையாளம், ஈர்-கொலாமி நீர், ஈர-கன்னடம்