பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்-தெலுங்கு நீர்-கொண்டா! சிறப்புச் செய்திகள் அகரம்

சகரம் அகரத்தோடு மொழி முதற்கண் வாராதென்பர் ஆசிரியர் தொல்காப்பியர். அதனல், பழந்திராவிட மொழி யில் மொழி முதற்கண் சகரம் வழங்கும் சொற்கள் மூவகை மாற்றங்களைப் பெற்றன என்பர்.

(1) சகரம் மொழி முதற்கண் கெடல்:

சவில் (பர்ஜி); அவல் (தமிழ்) (2) சகரம் தகரமாக மாறல்

சல் (பழந்திராவிடம்) தழல் (தமிழ்); அழல (கன்னடம்) அழல் (தமிழ்).

(3) சகர அகர ஆகாரம் சகர எகரமாக மாறல்.

சல்-செல் சம்-செம், செ சா-செத்தான் தொல்காப்பியர் காலத்தில் ச ஞ ய மொழி முதற்கண் அகரத்தோடு வருதல் இல்லை. சங்க இலக்கியத்தில் சமம் (புறம் 14/9), ஞமலி (புறம் 74/3), யவனர் (புறம் 56/8) என்ற சொற்கள் இடம் பெறுகின்றன. தொல்காப்பியர் காலத்துக்கு முன்பு இவை பேச்சு வழக்கில் இருந்து, பின் சங்க காலத்தில் ஏட்டுவழக்கில் ஏறி இருக்க வேண்டும்; அல்லது இவை பிற மொழி வழக்குகளாகப் புகுந்திருக்க வேண்டும் என்பர்.

ஞகரத்தைத் தொடர்ந்த அகரம் எகரமாகக் கன்னடத்தில் திரியும். ஒரளவு தமிழ் தெலுங்கிலும் மாறுவ துண்டு.

1. In the initial position a rather unstable n-occurs

in many Dravidian languages without defenite features o distribution—C. D. P. page 39.

2. தொல் எழுத்து-62.