பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

தென் திராவிட மொழிகளுக்குள் இருக்கும் இம் மாற்று வடிவங்களைத் தமிழ் மொழிக்கண்ணும் காணலாம்.

இ. மாற்றங்கள்

இலங்கு, இலகு-எல்: இள-எளி; சிறை-செறு: சிவ - செம் (கெம்); பிணவு - பெண்; பிற - பெறு: விளங்கு-வெள்ளை.

உ, ஒ மாற்றங்கள்

உடை - ஒடி உடன் - ஒடு: உளவு - ஒளி: குடு-கொடு; குழ-கொழுந்து; குயம்-கொய்; சுர-சொரி: துயங்கு - தொய்; துளை - தொள; புடை - பொடி: புதை-பொதி; புரை-பொரு; முழங்கு-மொழி.

இவற்றுள் எகர ஒகர வடிவங்களே பழமையானவை; இகர உகரம் அவற்றின் திரிபு என்பர்.’

வெம்மை என்னும் பகுதியிலிருந்தே வியர்வை (வெவ்) என்ற சொல் வந்திருக்க வேண்டும். செம் (கெம் என்பதன் திரிபு) என்பது சிவப்பு என்பதன் பழைய வடிவமாகும்.”

எகர ஒகரமே பழைய வடிவாயினும், அதனை நியதி என்று வற்புறுத்த இயலாத விதி விலக்குகள் உள்ளன என்பர்.

இரண்டு என்பதே தமிழின் பழைய வடிவாகும். எரடு (கன்னடம்) புதிய வடிவம் என்பர். இடம் (தமிழ்) - எட (கன்); இழை (தமிழ்)-எழெ (கன்); சில (தமிழ்) - கெல (கன்); நிழல் (தமிழ்) - நீட (தலு) - நெழல் (கன்); பிணை (தமிழ்) - பெணெ (கன்); விலை (தமிழ்) - பெலெ

1. C. P. Luci. 24 2. C. P. 15. 26