பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

இமை (தமிழ்)-எமெ (கன்); நிணம் (தமிழ்) -நெண (கன்); உலை (தமிழ்)-ஒலெ (கன்); நுரை (தமிழ்)நொரெ (கன்).

இவற்றுள் இகர உகரங்களே பழைய வடிவங்கள் என்பர் பேராசிரியர் பர்ரோ.

தமிழில் எகர ஒகரமாகத் தொடங்கும் வடிவங்களுள் சில கன்னடத்தில் இகர உகரமாக வழங்குகின்றன.

எதிர் (தமிழ்)-இதிர் (கன்); எலி-இலி; எய்-இய்; கெடு-கிடு; கெவி-கிவி, தெளி-திளி; வெதிர்-பிதிர்; வெயில்-பிசில்; ஒலி-உலி: கொடி-குடி, கொடு-குடு: தொடி-துடி, நொடி-துடி பொடி-புடி, பொருள்-புருள்: பொய்-புசி.’

இவற்றுள் எகர ஒகரமே பழமையானவை என்பர் பேராசிரியர் பர்ரோ.

ஐ, ஒள கூட்டொலிகளே

இவை தனி எழுத்துகள் அல்ல. இரண்டொலிகளின் கூட்டு ஒலிகளே. அதற்குக் காரணங்கள்:

(1) ர, ல, ழ முதலிய ஈற்று எழுத்துகளைப் போல யகரமும் ஈற்று எழுத்தாக இருந்திருக்க வேண்டும்.

கல்-கய் ர, ல க்களைப் போல யகரமும் விகுதி ஈற்று எழுத்தாக அமையும்.

மலர், நிழல்; அன்னய், பனய்; நீள்வு-அன்னய், பஞ்ட்டு என அமைதல் காண்க.

(2) யகரம் சகரத்தோடு உறழ்வு பெறும். சகரத்தின் திரிபாகவே யகரம் பல இடங்களில் அமையும்.

1. Collected papers—L. 30

3