பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

பகரம்

பகரம் கன்னடத்தில் ஹகரமாகத் திரியும். சில சொற் களில் கெட்டும் வழங்கும்.

பாகு-ஹாகு-ஆகு பெயர்-பெசர்-ஹெசரு-யெசரு புகை-பொக-ஹொகெ பத்து-ஹத்து பள்ளி-ஹள்ளி வகரமாக மாறுதல் : மொழியிடைப் பகரம் வரும் வடி வங்கள் தமிழில் மிகவும் குறைவு. தபு என்ற பழைய வடிவ மும் தவறு என மாறி விட்டது. அளபு, சார்பு என்பன அளவு சார்வு என மாறிவிட்டன. செய்பு என்னும் வினை வாய்பாடு பால் ஈறு புணரும் பொழுது செய்வான் என மாறு கிறது. உண்பான், தின்பான் என்பன முறையே உண்ணுவான் தின்னுவான் என மாறுகின்றன.

சோழர் கல்வெட்டுகளில் மார்பில் என்னும் சொல் மார்வில் எனக் குறிக்கப்பட்டுள்ளது. நிபந்தம் என்பது நிவந்தம் என வழங்குகிறது.

ப, ம, வ எனும் இதழ் இயை மெய்களின் சார்பால் அடுத்து வரும் இகரம், இதழ்குவி உயிராகிய உகர ஒகரங் களாதலும் உண்டு.

பிள்ளை-புள்ளெ வீடு-வூடு பெண்-பொண்ணு பிணம்-பொணம் பெண்டாட்டி-பொண்டாட்டி”

1, C. D. P. t li. 87