பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

றகரம்

தொல்காப்பியர் இதனை வல்லெழுத்து என்பர். பழந் திராவிடத்தில் றகரம் வேறு; ரகரம் வேறு. இக் காலத்தில் இஃது உரப்பொலியாக ஒலிக்கிறது. றகரம் இரட்டிக்கு மிடத்தே பழைய ஒலியைக் காணலாம். னகரத்தை அடுத்து வரும் றகரம் உரப்பொலி; ஏனையிடத்து ரகர ஒலியே ஒலிக் கிறது. இக் காலத்தில் ரகர, றகர வேறுபாடு ஒலிப்பில் மிகுதி யாக இல்லை. எனினும், பொருள் வேறுபாட்டுக்கு இவ்விரு எழுத்துகள் தேவைப்படுவதால் றகர ரகர வேறுபாடு போற்றப்படுகிறது.

கறி-கரி பறி (பிடுங்கு) - பரி (வருந்து) அறம் (தருமம்)-அரம் (கருவி) சோழர் கல்வெட்டில் றகர ரகர வேறுபாடு மறைந்த நிலையில் இருவகைச் சொற்கள் வழங்கின.” மேர்க்கு (மேற்கு), விரகு (விறகு) இறண்டாவது (இரண்டாவது) ற்ற என்பது த்த எனவும் வழங்கியது.

மாவேத்தத்து (மாவேற்றத்து) எனச் சோழர் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.

வீரசோழியம் ஆற்றுக்கால், சேற்றுநிலம் என்பன ஆத்துக்கால், சேத்துநிலம் என வழங்குவதை எடுத்துக் காட்டும்.

பத்தாம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டுகள் கீழ்வரும் வழக்காறுகளை எடுத்துக் காட்டுகின்றன.

திருவையாத்து (திருவையாற்று) முன்னெத்தி (முன்னெற்றி) திருச்சித்தம்பல (திருச்சிற்றம்பல)”

1. . . . . 97 2. தமிழ் எழுத்திய்ல்-பக். 192