பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

கீழ்வரும் சொற்கள் ரகர றகர வேறுபாடு மறைந்து வழங்கியமையைக் காட்டும்.

இவை சோழர் காலத்துக் கல்வெட்டுகளில் காணப்படும் வழக்குகள்.

நீற் வாற்த்து (நீர் வார்த்து) பதிநாரும் (பதினறும்) முசருச (ராசராச): இச் சான்றுகள் சோழர், பல்லவர்கள் காலத்தில் றகரம் ரகரமாகவே ஒலிக்கப்ப்ட்டது என்பதை எடுத்துக் காட்டு கின்றன. பழங்காலத்தில் றகரம் தடை வல்லொலியாகவே ஒலிக்கப்பட்டது என்பது தொல்காப்பியத்தால் விளங்கு கிறது. இன்று ஏனைய வல்லொலிகளைப் போலவே இதன் இயல்பும் உள்ளது.

வயிறு-வயிற்று கயிறு-கயிற்று என இரட்டுதலும் பெறுகிறது. ஏனைய வல்லொலிகளைப் போலவே சொற்களில் இஃது உகரம் பெற்றே முடிகின்றது.

கயிறு: வயிறு இக் காலத்தில் சாற்று என்பது சாட்டு என மருவி விட்டது. குற்றச்சாட்டு என்னும் சொல் பெருவழக்காகி விட்டது.

மெல்லின மெய்கள் -ங்கரம்

தமிழில் ங்கரம் அருகிய வழக்காகும். அங்ஙனம் இங்ஙனம் எங்ஙனம் யாங்ஙனம் என்ற சொற்களில் மட்டும் ங்ணம் என்ற சொல்லில் தனி எழுத்தாக அது வழங்குகிறது: ககரத்தின்முன் மகரத்தின் திரிபாகவும் வழங்குகிறது.

செம்பவளம்-செங்காந்தள்: செங்கால்

1. தமிழ் எழுத்தியல்-பக். 192