பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

ஞகரம்

ஈ, ஊ என்பவற்றாேடு ஞகரம் மொழி முதலில் வருவ தில்லை; ஆ, எ, ஒ என்பவற்றாேடு தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது. ஞகரம் வழங்கும் சொற்களில் நகரம் இடம் பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்னும் ஒரே சொல்லில் மட்டும் ஞகரம் திரியாமல் இருக்கிறது. மலையாள மொழியில் ஞகரம் நகரமாகத் திரியாமல் வழங்கி வருகிறது. அம் மொழிக்கு இஃது அடிப்படை ஒலியாகும். .

சோழர் கல்வெட்டில் ஞகரம் இருந்த இடத்தில் நகரம் இடம் பெற்றுள்ளது.

நாயிறு (ஞாயிறு); நான்று (ஞான்று) என வழங்கு கின்றன.”

கீழ்வரும் சொற்களில் ஞகரம் வழங்குகிறது.

ஞண்டு, ஞமலி, ஞாஞ்சில், ஞாயிறு, ஞாலம். இவை மொழி முதற்கண் ஞகரம் வந்த சொற்களாம்.

மஞ்ஞை நெஞ்சம்; உழிஞை; உரிஞ். இவை இடையும் கடையும் வந்த சொற்களாம்.

யகரம் ஞகரமாகவும் நகரமாகவும் திரிதல் உண்டு. யமன்-ளுமன்-நமன் இவற்றுள் யகரமே பழையது எனத் தெரிகிறது. தேவார காலத்தில் நகரம் ஞகரமாகத் திரிந்தமைக்கு அப்பர் தேவாரம் சான்று பகர்கின்றது.

கை-நின்ற-கைஞ்ஞரின்ற மெய்-நின்ற-மெய்ஞ்ஞன்ற . தொல்காப்பியர் யகரம் வருமிடத்து ஞகரம் வரும் வழக்கைக்குறிப்பிடுவர். -தொல்-எழு. 147

மண் யாத்த-மண்ஞாத்த பொன் யாத்த-பொன்ஞாத்த

7

1. c. D. P. E. 126

6