பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

ளுமில் என்பது இடம் பெயர்ந்து மDல் என ஆகிப் பின் மயில் ஆகியது என்பர். ஞமில் என்பது மயிலைக் குறிக்கும் பழஞ்சொல்லாகும்.

பேச்சு மொழியில் ஞகரம் க்ய’ என மாறுகிறது.

ஞானம்-க்யானம் ஞாபகம்-க்யாபகம்.

ணகரம்

தமிழில் மொழி முதற்கண் ணகரம் வருதல் இல்லை தெலுங்கில் ணகரம் னகரமாக மாறுகிறது.

கண்-கன்னு (தெலு) மண்-மன்னு (தெலு) ளகரம் ணகரமாகவும் டகரமாகவும் மாறும் இயல்பிற்று’

நள்-நண்பு-நட்பு

நகரம்

நகரம் மொழி முதற்கண் வரும்; செய்யுநர், அறியுநர், முதலிய சொற்களில் இடையிலும் வருகிறது. பொருந், வெரிந் என்ற இரு சொற்களில் மட்டும் நகரம் ஈற்றில் வருகிறது. வேறு எங்கும் மொழியிடையும் கடையும் வரவில்லை. . மொழியிடையே தகரத்தின் - முன் மெல்லொலியாக வருகிறது.

செம்பவளம்-செஞ்சாந்து-செந்தார். இது மகரத்தின் திரிபாகும்.

இருந்தனர். வந்தனர் முதலிய சொற்களில் தகரத்தின் இன மெல்லொலியாக வருகிறது.

வட்சொற்களைத் தமிழில் எழுதும் பொழுது இருவகை வடிவங்களால் எழுதுகின்றனர்.

- 1. C. D. P. ப்க். 138