பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பெயர்ச் சொற்கள்

பெயர் காலம் காட்டாது; வேற்றுமை ஏற்கும். வினை வேற்றுமை ஏலாது; காலம் காட்டும். பெயர், வினைகளுக் கிடையே உள்ள வேற்றுமை இவையே.

பெயர், திணை பால் எண் உணர்த்தல்

. 1. திராவிடச் சொற்கள் உயர்திணை, அஃறிணை எனும் பாகுபாடுகளைப் பெற்று இயங்குகின்றன. தெலுங்கு இலக் கணம் இவற்றை முறையே மஹத், அமஹத் எனக் குறிப்பிடு கிறது. நன்னூல் மக்கள், தேவர், நரகர் உயர்திணை: ஏனைய உயிர் உள்ளனவும் இல்லனவும் அஃறிணை எனக் கூறும்.

. 2. திராவிடச் சொற்களில் பால் ஈறுகள் மூவிடப் பெயர் களிலும் வினைமுற்றுகளிலும் தெளிவாக உணரத் தக்க நிலையில் உள்ளன. பெயர்களுள் சிலவே பால் காட்டாதன. அவை பயனிலையாக முடியும் வினைகளைக் கொண்டு பால் உணரப் படும். -

3. பெயர்களில் இகரமும் ளகரமும் பெண்பால் விகுதி களாக அமைய, வினைமுற்றில் ளகரஈறு மட்டும் இடம் பெற்றுள்ளது.

ஒருத்தி வந்தாள் அவள் வந்தாள் 4. தெலுங்கில் இகர விகுதி பெயரிலும் வினையிலும் பெண்பாலை உணர்த்துவதோடு, ஒன்றன்பாலுக்கும் உரியதா வருகிறது.