பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

அதி வச்சினதி-அவள் வந்தாள். அது வந்தது எனப் பொருள்படும்.

இது மத்திய திராவிட மொழியின் இயல்பு எனக் கருதப் படுகிறது.

5. மலையாளத்தில் சுட்டுப் பெயர்கள் பால், எண் வேறு பாடுகளைக் காட்டும். எனினும், அவை கொள்ளும் வினைகள் பால் ஈறுகளைப் பெறுவதில்லை.

6. நீலகிரி வாழ் துதவர் மொழியில் சுட்டுப் பெயர்களில் ஒருமைப் பன்மை வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனல், ஆண், பெண், ஒன்றன்பால்களுக்குத் தனி உருபுகள் இல்லை.

அத்-(அவன், அவள், அது) அதம்-(அவர்கள், அவை)

7. பிராஹா மொழியிலும் சுட்டுப் பெயர்களும் வினை முற்றுகளும் ஒருமைப் பன்மை வேறுபாடுகளை மட்டும் காட்டும் என்பர்.

8. ஏனைய திராவிடமொழிகள் அனைத்தும் சுட்டுகளிலும் முற்றுகளிலும் பால், எண் பாகுபாடுகளைப் பெற்றுள்ளன என்பர். - +

9. கொண்டா, கோந்தி, கோயா, கொலாமி, நயிகி, பர்ஜி, கதப முதலிய மத்திய திராவிட மொழிகளில் தெலுங் கைப் போலவே சுட்டுப் பெயர்களிலும் வினைமுற்றுகளிலும் பெண்பாலுக்கு எனத் தனி விகுதிகள் இல்லை. ஒன்றன் பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவாக ஒரே விகுதியைப் பெற்றுள்ளன.”

Dravidian Nounes v. Shanmugam u. 3 2. D. N. பக். 3 - 3. D. N. பக். 5