பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

ஒன்று, இரண்டு, மூன்று. ஐந்து, ஆறு, எட்டு, பத்து எனும் சொற்களின் ஈறுகளில் வரும் து, டு, று எனும் மூன்று விகுதிகளுள், து என்பது ஆக்க விகுதியாகும். ஏனையயிரண்டும் அதன் மாற்று வடிவங்களாகும். இரண்டு முதலாய எண்கள் ஒன்றன்பாலுக்குரிய விகுதியைப் பெற்றமைக்குக் காரணம், எண்களைத் தொகைப்படுத்தி ஒன்றாகக் காணும் உணர்வே யாகும்.

மரது போன்ற வடிவம் ஒன்றன்பாலைக் குறித்திருக்கலாம். அதுவே வேற்றுமையில் மரத்துக் கிளை என இரட்டித்திருக் கலாம்; பின்னல் அத்து’ என்பதைச் சாரியையாகக் கொண் டிருக்கலாம்.’

20. மலையாளத்தில் னகரமே ஆண்பால் விகுதியாகும்” அன், ஆன், க்கன் என்பன அதன் மாற்று வடிவங்களாகும்:

தச்சன், தட்டான். செறுக்கன்.

இ, அள் என்பன பெண்பால் விகுதிகளாகும்.

மகள், ஒருத்தி, கொறத்தி, வேளாத்தி, வண்ணத்தி.” அர், ஆர், வர், மார், கள் முதலியன பலர்பால் விகுதி களாக வழங்குகின்றன.

கள் என்பதே பலவின்பால் விகுதியாகும்.

21. கன்னடத்தில் அன், அம் என்பன ஆண்பால் விகுதி களாகும். அள், இ. தி என்பன பெண்பால் விகுதிகளாகும். அர், வர், கள் என்பன பலர்பால் விகுதிகளாகும். கள் (gal) பலவின்பால் விகுதியாகும்.

22. பழக்தெலுங்கில் அன் என்பதனேடு ன்று என்ற வடிவ வம் ஆண்பால் விகுதியாக வழங்கியது.