பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிகலன்கள்

141


பொத்தான்கள்

செம்பு, வெண்கலம், பீங்கான், மாக்கல் முதலியவற்றால் வட்ட வடிவத்தில் செய்யப்பட்ட பொத்தான்கள் பல கிடைத்துள்ளன. அவை பொதுவாக, மால்ட்டா, போர்ச்சுகல், தென் பிரான்ஸ் முதலிய நாடுகளிற் கிடைத்த பண்டைக் காலப் பொத்தான்களை ஒத்துள்ளன. அவை தட்டையாகச் செய்து சட்டை மீது பொருத்தித் தைப்பதற்கேற்றவாறு இரண்டு துளைகள் இடப்பட்டுள்ளன. உலோகத்தால் ஆன பொத்தான்கள் முன்புறம் குமிழாகச் செய்யப்பட்டு, அடியில் இரண்டு துளைகள் இடப் பட்டுள்ளன. சில பொத்தான்கள் பிறை வடிவத்தில் செய்யப் பட்டுத் துணியில் இணைத்துத் தைத்துக் கொள்ளத்தக்க வசதியுட்ன் காணப்படுகின்றன. ஹரப்பாவில் வெள்ளிப் பொத்தான்கள் சில கிடைத்துள்ளன. அவற்றின் நடுவே சிப்பித் துண்டுகள் அழகாக வைத்துப் பதிக்கப்பட்டுள்ளன. அவை பார்வைக்கு எழில் மிகுந்து காணப்படுகின்றன.

தலை நாடாக்கள்

மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த சில களிமண் பதுமைகள் வாயிலாக, அக்கால மக்கள் தலையில் ஒரு வகை நாடாவைச் சுற்றிக் கட்டிக்கொண்டிருந்தனர் என்பது வெளி யாகிறது. அக்கால ஆடவரும் பெண்டிரும், அந்நாடாக்களைப் பயன்படுத்தினர். இப்பழக்கம் சுமேரியரிடையும் மிகுந்திருந்தது. அந்நாடாக்கள் சுருணைகளாகச் சுற்றி வைக்கப்பட்டு, நகைக் குவியல்களுடன் கிடைத்தன. இவற்றுட் சில மங்கிவிடாமலும் உறுதி இழவாமலும் இருக்கின்றன. இவை 1 செ. மீ. அகலத்தில் மெல்லிய தங்கத் தகட்டால் சரிகைபோலச் செய்யப் பட்டுள்ளன. சில நாடாக்கள் 40 செ மீ நீளமாக இருக்கின்றன. அந்த நாடாக்களின் இருமுனைகளும் துளையிடப்பட்டு, இழுத்துக் கட்ட வசதி உடையனவாக இருக்கின்றன. சிலவற்றில் ஒருபுறம் முழுவதும் வரிசையாகத் துளையிடப்பட்டுள்ளது. இத்துளைகளில் பிற அணிகள் ஏதேனும் மாட்டித்