பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

மொஹெஞ்சொ - தரோ


கள் முதலியவற்றைச் சுமேரியாவுக்கு ஏற்றுமதி செய்திருக் கின்றனர்.[1]

(14) சிந்து வெளி மட்பாண்டங்கள் மீது பூசப்பட்ட செங் காவிப்பொடி இந்தியாவில் இன்ன இடத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டதென்பது துணிதற்கில்லை. ஆயின், பாரசீக வளைகுடாவை அடுத்துள்ள ஹொர்முஸ் (Hormuz) என்னும் இடத்திலிருந்து உயர்தரச் செங்காவிப் பொடி இன்றும் இந்தியாவில் இறக்குமதி ஆகி வருவதால், அவ்விடத்திலிருந்தே அப்பழங்காலத்திலும் வந்திருக்கலாம்.

(16) வடநாட்டு மிட்டாய் வகைகளைத் தட்டுகளில் வைத்து தெருக்களில் விற்கும் வடநாட்டவர், அத்தட்டுகளைத் தாங்க மூங்கிற் குச்சிகளால் ஆகிய தண்டுகளை எடுத்து வருதல் காண்கிறோம். அத்தகைய நாணலாலான தண்டுகள் பலவற்றை மொஹெஞ்சொ-தரோ மக்கள் பயன்படுத்தி வந்தனர்.அதைப் போன்ற தண்டுகள் சுமேரியா, எகிப்து, ஏலம் முதலிய இடங்களில் கல்லாலும், மண்ணாலும் செய்யப்பட்டுள்ளன. எனினும், இம்மூன்று நாட்டவரும் சிந்துவெளி மக்களிடமிருந்தே இத்தண்டுகள் செய்தலைக் கற்றிருத்தல் வேண்டும்.

(16) இருதய வடிவத்தில் எலும்புகளைக் கொண்டு செய்யப் பட்ட நுணுக்க வேலைப்பாடு அமைந்த வேறு அணிகளில் பதிக்கத்தக்க சிறிய அழகிய பொருள்கள் டெல்அஸ்மரில் கிடைத்துள்ளன. அவை சிந்து வெளியிற் கிடைத்த சிப்பிகளால் ஆன பொருள்களைப் பெரிதும் ஒத்துள்ளன. இவை இருவகை யினவும் ஒரே காலத்தன.

(17) கிரேக்க சிலுவை (Greek Cross) வடிவம் பொறிக்கப் பட்ட முத்திரை ஒன்று வட கிழக்குக் கிரீஸில் கிடைத்தது. அது புதிய கற்காலத்திற்கு உரியது. அதுபோன்றவை பல மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்துள்ளன. எனவே, அவை சிந்து வெளிக்கே உரியன


  1. K.N.Dikshit’s ‘Pre-historic Civilization of the Indus Valley’, p.39.